Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பூப் போல பூமிகா
நடிக்கும் கேரக்டர்களை பூ என ஊதி விட்டு உசுப்பலாக நடிப்பதில் பூமிகா கில்லாடி. சாவ்லா பெத்த இந்த சில்பான்ஸ் பாப்பாவுக்கு இப்போது தமிழை விட தெலுங்கில்தான் நிறைய வாய்ப்பு. வாயெல்லாம் பல்லாக நடித்து கலக்கி வருகிறார் பூமிகா.
வடக்கிலிருந்து வந்த வாசமான வரவுதான் பூமிகா சாவ்லா. தெலுங்கில் கொடியேற்றிக் கொண்டிருந்த பூமிகாவை, ரோஜாக் கூட்டம் தமிழுக்கும் கூட்டி வந்து ரசிகர்களின் நெஞ்சங்களை தத்தளிக்க வைத்தனர்.ரோஜாக்கூட்டம் சிறப்பாக ஓடியும் பூமிகாவுக்கு தமிழ் ரெட் கார்பட் விரிக்கவில்லை. இதனால் மறுபடியும் தெலுங்குக்குத் தாவினார் பூமிகா. பின்னர் விஜய்யுடன் பத்ரி படத்தில் தலையைக் காட்டினார்.
விஜய்யை விட சிறப்பாக நடித்து ரசிகர் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டார் பூமிகா. அப்படியும் தொடர்ந்து வாய்ப்பு வரவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சில்லுன்னு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவை விட சிறப்பான ரோல் பூமிகாவுக்கு.
அமர்க்கள நடிப்பு, அடக்கமான கிளாமர் என பட்டையைக் கிளப்பி வரும் பூமிகா, இப்போது தெலுங்கில் பிசியான நடிகை. இத்தனைக்கும் பெரிய நடிகர்களுடன் நடிப்பதில்லை பூமிகா.
ஆனாலும் சிறிய நடிகர்களுடன் அவர் நடித்த மிஸ்ஸியம்மா, சத்யபாமா, ஒக்கடு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாகி பூமிகாவின் மார்க்கெட்டில் வசந்தத்தை வாரி வழங்கியது.
பூமிகாவுக்கு ஹீரோ யார் என்பது முக்கியமில்லையாம். கதைதான் அவருக்கு ரொம்ப முக்கியமாம். கதை நன்றாக இருந்தால் போதும், யார் ஹீரோவாக இருந்தாலும் நடிப்பேன் என்கிறார் புன்னகை பூத்தபடி.
சிங்கிள் பாட்டுக்கு ஆடுவேளா என்று கேட்டபோது, நிச்சயமாக ஆட மாட்டேன். குத்துப் பாட்டில் அப்படி என்னதான் இருக்கிறதோ என்று ஆச்சரியம் காட்டும் பூமிகா, அப்படி ஒரு எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது. அதற்கு அவசியமும் இல்லை என்கிறார் அழகாக.
பூமிகா பேசுவது பூ விரிவது போல, தனி அழகுதான்!