பூமிகா படத்தில் நடித்த குட்டி சமந்தாவின் வைரல் பேட்டி; சிவகுமார் சபதம் ஹீரோயினும் இவங்க தான்!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விஜய் டிவி மற்றும் நெட்பிளிக்ஸில் வெளியான பூமிகா திரைப்படம் பலரது மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

இயற்கையை மனிதர்கள் சீரழிக்கக் கூடாது என்கிற கருத்தோடு உருவாகி உள்ள இந்த பேய் படம் விஜய் டிவியில் நேரடியாக வெளியானது. அடுத்த நாளே நெட்பிளிக்ஸில் வெளியான இந்த படம் டாப் 3 இடத்தில் உலகின் பல நாடுகளில் பார்க்கப்பட்டு வருவதாக நெட்பிளிக்ஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மாதுரி ஜெயின் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.
ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படமான சிவகுமார் சபதம் படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சிவகுமார் பொண்டாட்டி பாடலை பார்த்து விட்டு பலரும் இவரை குட்டி சமந்தா என்றே அழைத்து வருகின்றனர்.
இந்த பேட்டியில் அந்த கம்பேரிசன் குறித்து கேட்டதற்கு அது தனக்கு சந்தோஷம் தான் என்றும், மாதுரி ஜெயின் என அழைப்பதையே தான் விரும்புவதாகவும், என்னுடைய ஒரிஜினாலிட்டி வெளியே தெரிய வேண்டாமா என வெள்ளந்தியாக பேசியுள்ள நடிகை மாதுரி ஜெயின் பூமிகா திரைப்படத்தின் வொர்க்ஷாப்புக்கு சென்ற போது தான் இயற்கை குறித்த பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் நானும் வீட்டில் செடி மற்றும் மரங்களை வளர்க்க தொடங்கி இருக்கிறேன். என்னால் முடிந்த வரை இந்த இயற்கை எந்த கேடும் வராமல் பார்த்துக் கொள்ள முயற்சிப்பேன் என பேசியுள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











