கன்னிமாடத்தின் முதுகெலும்பே ஹீரோயின்தான் - போஸ் வெங்கட்

Recommended Video

சென்னையை சமாளிப்பது தான் கஷ்டமே - பாஸ் வெங்கட் சிறப்பு பேட்டி

சென்னை: கன்னி மாடம் படத்தின் முதுகெலும்பே ஹீரோயின் தான். இந்தப்படம் மொத்தத்தையும் தாங்கிப் பிடிப்பதே படத்தின் கதாநாயகிதான் என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார். ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு சொல்ல நினைத்ததை நான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் வெளிவந்த மெட்டி ஒலி தொலைக்காட்சி சீரியலில் அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட். ஆட்டோ டிரைவரான போஸ் வெங்கட், அந்த தொலைக்காட்சி சீரியலின் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த சீரியல் மூலம் திரைப்படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடிவந்தன. ஈரநிலம், தீபாவளி, அரசாட்சி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், சிவாஜி, மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.

தற்போது நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கன்னி மாடம் என்னும் படத்தை எடுத்து முடித்துவிட்டு வெளியீட்டு வேலையில் தீவிரமாக உள்ளார். இந்த பிசியான நேரத்தில் நமது பிலிமி பீட்டுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கன்னி மாடம்

கன்னி மாடம்

திருமணம் என்னும் கமிட்மெண்ட் இல்லாமல் இருந்திருந்தால் நான் எப்பொழுதோ இயக்குநராக ஆகியிருப்பேன் கன்னி மாடம் படத்தை தயாரிப்பதற்கு அருமையான தயாரிப்பாளர் கிடைத்தார். அதோடு எனக்கு கிடைத்த தொழில்நுட்பக் கலைஞர்களும் நல்ல திறமையானவர்களாக இருந்ததால், படப்பிடிப்பு நினைத்ததை விட சீக்கிரத்தில் முடிந்துவிட்டது.

பரபரப்பாக முடிந்த படப்பிடிப்பு

பரபரப்பாக முடிந்த படப்பிடிப்பு

நீண்ட நாட்களாகவே படம் இயக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சில கமிட்மெண்ட்டுகள் இருந்ததால் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தேன். தற்போது தான் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது. உடனடியாக களத்தில் இறங்கிவிட்டேன். முதலில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தோம். பின்னர் 40 நாட்களாக சுருக்கினோம். பின்பு அதையும் 35 நாட்களாக சுருக்கி 31 நாட்களிலேயே முழு படப்பிடிப்பையுமே முடித்துவிட்டோம் என்றவர், தற்போது சின்ன சின்ன ஒட்டு வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளது.

படத்தின் முதுகெலும்பு

படத்தின் முதுகெலும்பு

கன்னி மாடம் படம் முழுக்க முழுக்க ஹீரோயின் சம்பந்தப்பட்ட படமாகும். கதாநாயகின் பெயர் சாயா தேவி. இவர் இயக்குநர் யார் கண்ணனின் மகள். இந்தப் படத்தின் முதுகெலும்பே ஹீரோயின் தான். இந்தப்படம் மொத்தத்தையும் தாங்கிப் பிடிப்பதே படத்தின் கதாநாயகிதான் என்று போஸ் வெங்கட் கூறினார்.

கன்னி மாடம் கதை என்ன

கன்னி மாடம் கதை என்ன

பொதுவாகவே சென்னையைப் பற்றியும், அங்குள்ள மனிதர்களைப் பற்றியும் புரிந்து கொள்வதே கஷ்டம். அத்தோடு சென்னையில் வாழ்வது ரொம்ப கஷ்டம். 20 வயதுள்ள ஒரு பெண் சென்னைக்கு ஓடிவந்து வந்து எப்படி தாக்குப்பிடித்து வாழ்ந்து காட்டுகிறாள் என்பதுதான் கதை. சுருக்கமாக சொன்னால், ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு சொல்ல நினைத்ததை நான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று போஸ் வெங்கட் கூறினார்.

ஹீரோ யாரு

ஹீரோ யாரு

படத்தின் கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக். இவர் ஏற்கனவே வண்டி என்னும் தமிழ் படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகன் விஷ்ணு ராமசாமி. இவர் இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றியவர்.

எல்லாருக்கும் பிடிக்கும்

எல்லாருக்கும் பிடிக்கும்

ஒரு படத்தின் தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் தான் அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் முதல் தொழில்நுட்பக்கலைஞர்கள் வரை அனைவரும் நன்றாக இருக்க முடியும் என்று போஸ் வெங்கட் கூறினார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சமுள்ள படமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

அவர்கள் தான் காரணம்

அவர்கள் தான் காரணம்

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இதுபற்றி கூறிய போஸ் வெங்கட், நான் இந்த அளவிற்கு உயர்ந்த நிலைமைக்கு வருவதற்கு நடிகர் சிவகுமார் சார், சூர்யா, ஜோதிகா மேடம், மற்றும் கார்த்தி என அவர்கள் குடும்பமே காரணம் என்றார் நெகிழ்ச்சியோடு. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் கூறி விடை பெற்றோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X