அமரன் வசூல் ஏமாற்று வேலையா?.. ப்ளூ சட்டை மாறனையும் வம்பிழுத்துப் பேசிய போஸ் வெங்கட்!

சென்னை: பெரிய தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஒரு படத்தை வாங்கி இன்று வரை அதை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த படத்திற்கு வரும் கலெக்‌ஷன் செய்தியெல்லாம் சுத்த ஃபேக் என அமரன் படத்தை மறைமுகமாக தாக்கி பேசியிருக்கிறார் போஸ் வெங்கட்.

மெட்டி ஒலி சீரியலில் நடித்து பிரபலமான போஸ் வெங்கட் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் அதிகளவில் நடித்து வருகிறார். கன்னி மாடம் மற்றும் இந்த ஆண்டு வெளியான விமல் நடித்த சார் படத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார்.

blue sattai maran bose venkat amaran

நவம்பர் 14ம் தேதி வெளியான சூர்யா படத்திலும் சகுனி மாமா போன்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ப்ளூ சட்டை மாறனையும் வம்பிழுத்து பேசிய நிலையில், அவரும் இவரை ட்ரோல் செய்து வருகிறார்.

300 கோடி வசூல்: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக 20 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. கங்குவா படத்தை விட டிக்கெட் புக்கிங்கில் அமரன் படம் மாஸ் காட்டி வரும் நிலையில், 19 நாட்களில் 300 கோடி வசூலையும் சிவகார்த்திகேயன் படம் அள்ளியுள்ளது. நடிகர் அஜித் குமார் சொன்னது போல சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பல நடிகர்களை இன்செக்யூராக ஃபீல் செய்து வைத்து வருவது நல்லாவே தெரிகிறது என எஸ்கே ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

எல்லாமே பொய்: கங்குவா படத்தில் நடித்துள்ள போஸ் வெங்கட் ஆடியோ லாஞ்சிலேயே நடிகர் சூர்யாவை அரசியலுக்கு வரவேண்டும் என்றும் விஜய் அரசியலுக்கு தகுதியானவர் இல்லை என்பது போலவும் பேசி சர்ச்சையை கிளப்பினார். அதே மேடையில், ஆர்ஜே பாலாஜி போஸ் வெங்கட் பேச்சுக்கு பதிலடி கொடுத்து சூர்யா அரசியலுக்கு வரவேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், கங்குவா படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களால் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அமரன் படத்தை மறைமுகமாக சாடி அந்த படத்தின் வசூல் கணக்கு எல்லாம் பொய் கணக்கு என போஸ் வெங்கட் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். தங்கள் படத்தின் மீது வன்மத்தை கக்கக் கூடாது என்று சொல்லி விட்டு அடுத்தவர் படத்தை மட்டும் ஜோதிகா முதல் போஸ் வெங்கட் வரை ஏன் இப்படி மறைமுகமாக தாக்கி பேசுகின்றன்ர் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அந்த கண்ணீர் கதை எல்லாம் டிராமா: கடைசியாக மக்கள் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்துவிட்டு கண்ணீர் வடித்த நிலையில், புதிதாக வந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அழுது கொண்டே வெளியே வருவதெல்லாம் செட்டப் டிராமா என்றும் போஸ் வெங்கட் பேசியுள்ளார். எது நல்ல படம், எது ஏமாற்று வேலை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் கங்குவா படத்துக்கு எதிராக ஏகப்பட்ட ப்ளூ சட்டை மாறன்கள் உலகம் முழுவதும் உருவாக காரணம் அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு ஏமாற்றியது தான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் vs போஸ் வெங்கட்: நீங்க இட்லி சாப்பிடணுமா இல்லை சட்னி சாப்பிடணுமான்னு ப்ளூ சட்டை மாறனிடம் கேட்டா சாப்பிடுறீங்க நல்ல படமா இல்லை மோசமான படமா என்பதை நீங்கள் பார்த்துவிட்டு முடிவு பண்ணுங்க என போஸ் வெங்கட் பேசியுள்ளார். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ் வெங்கட்டை கலாய்த்து ப்ளூ சட்டை மாறனும் இட்லிக்கு சட்னி தொட்டுக்கிட்டு சாப்பிடுவோம் என்றும் உதாரணமே சொல்லத் தெரியவில்லையே என பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X