பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல தங்கச்சியா நடிச்ச மோனிஷா.. இப்ப என்ன பண்றாரு தெரியுமா?
சென்னை: பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாக நடித்த MC மோனிஷா அளித்துள்ள ஜாலி பேட்டி தற்போது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.
Recommended Video
சத்யம் சினிமாஸ் தயாரிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான திரு திரு துரு துரு படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் மோனிஷா.

அஜ்மல் நாயகனாகவும், ரூபா மஞ்சரி நாயகியாகவும் நடித்த அந்த படத்தில் சரளா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது உலகநாயகன் கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பற்றியும், அவருடன் பேசிய அனுபவங்களையும் இந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு தங்கையாகவும் ஆர்.ஜே. ஆகும் கனவுடன் இருக்கும் இளம் பெண்ணாகவும் நடித்திருந்த மோனிஷா, சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இந்த லாக்டவுனில் வீட்டில் இருந்த படியே ஜூம் வீடியோ காலில் ஜும்பா நடனத்தை சொல்லித் தந்து பிரபலமாகி வரும் அவர், மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைப்பது குறித்து பேசியுள்ள ஜாலியான வீடியோவை காண தவறாதீர்கள்!


Click it and Unblock the Notifications











