twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்.. காந்தாரா உருவான விதம் குறித்து நடிகர் ரிஷப் ஷெட்டி விளக்கம்!

    |

    சென்னை: நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி வெளியாகியுள்ள படம் காந்தாரா. இப்படமானது கர்நாடகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து திரைத்துறையினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முகதிறமை கொண்ட ரிஷப் ஷெட்டி நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

    நம்ம பிரச்சனைகளுக்கு நாம் தான் பொறுப்பு..வெற்றிமாறன் தெரியாமல் எதுவும் கூற மாட்டார் திவ்யா துரைசாமி!நம்ம பிரச்சனைகளுக்கு நாம் தான் பொறுப்பு..வெற்றிமாறன் தெரியாமல் எதுவும் கூற மாட்டார் திவ்யா துரைசாமி!

    PAN INDIA படம்

    PAN INDIA படம்

    கேள்வி: காந்தாரா படத்தின் வரவேற்பு குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: காந்தாரா திரைப்படத்தை முதலில் கர்நாடகாவில் வெளியிட்டோம். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு நன்றாக இருந்தது. இதை தொடர்ந்து எல்லோரும் பேன் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய சொன்னார்கள். தற்பொழுது ட்ரீம் வாரியர்ஸ், கீதாபிலிம்ஸ் போன்றோர் படத்தை விரைவாக டப்பிங் செய்து அந்த மாநில மொழிகளில் கேட்டுள்ளனர். அதற்காக இரவு பகலும் பாடுபட்டு படத்தை ரீலீஸ் செய்து வருகிறேன் என்றார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    கேள்வி: காந்தாரா படத்தின் மையக்கருத்து என்ன?

    பதில்: இயற்கைக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை மையப்படுத்துவது தான் காந்தாரா படத்தின் கதை. நாம் வாழ்கின்ற மண் மற்றும் பிராந்தியம் குறித்து படம் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் கமலஹாசன் நடித்ததை பார்த்து இது போன்று நாமும் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் வரக்கூடிய எருமைமாடு பந்தயம் எங்கள் ஊரில் நடந்ததை நான் சிறுவயதில் பார்த்துள்ளேன். இது தொடர்பான விளையாட்டை எங்களது குடும்பம் முன்னின்று நடத்தும். இப்படத்தில் இடம்பெற்ற எருமைமாடு பந்தயம் எங்கள் ஊரில், எங்கள் வீட்டு தோட்டத்தில் தான் படமாக்கினேன். இக்காட்சியில் நடிப்பதற்காக முதலில் பயிற்சி மேற்கொண்டேன். நடிகர் வடிவேலு பாணியில் கூற வேண்டுமென்றால், பில்டிங் ஸ்ட்ரங்.. பேஸ்மெண்ட் வீக் என்பது போல் எனக்கு காயம் தான் ஏற்பட்டது. எல்லோரும் என்னிடம் இதை டூப் போட்டு எடுத்து விடலாம், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றனர். ஆனால் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் பயிற்சி மேற்கொண்டேன். 2வது தடவை முயற்சி செய்யும்பொழுது தான் நம்பிக்கை வந்தது. இயக்குநர், நடிப்பு, இது தொடர்பான பயற்சி போன்றவற்றை ஒரே நேரத்தில் செய்தேன் என்றார்.

    எங்கிருந்து எனர்ஜி வந்தது

    எங்கிருந்து எனர்ஜி வந்தது

    கேள்வி: நடிகர் தனுஷ் உங்களிடம் பேசியது என்ன?

    பதில்: நடிகர் தனுஷ் படத்தின் கிளைமாக்சிற்கு பாராட்டு தெரிவித்தார். என்னிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டார். நான் வயதை கூறியவுடன், நம் இருவருக்கும் ஒரே வயது என்று தெரிவித்தார். நான் அவரிடம் கல்லூரியிலிருந்தே உங்கள் படங்களை பார்த்து வருகிறேன் என்றேன்ர். அவர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எங்கிருந்து உங்களுக்கு இந்த எனர்ஜி வந்தது என்று கேட்டார். நாம் நினைப்பதை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதை தான் செய்தேன் என்றேன். மொழியை பார்க்காமல், அனைத்து தரப்பினரும் தங்களுடைய மொழி, மண் போன்றவற்றுடன் தொடர்புப்படுத்தி படத்தை பார்த்து வருவது பெருமையாக உள்ளது என்றார். மேலும் நடிகர் பிரபாஸ் இரண்டு முறை படத்தை பார்த்துள்ளதாக தெரிவித்தார். மேலும் முதலில் ரசிகர்கள் படத்தை புரோமேஷன் செய்தார்கள். தற்பொழுது சினிமாத்துறையில் இருப்பவர்கள் புரோமேஷன் செய்து வருகிறார்கள் என்றார்.

    தூய்மையான ஆற்றல்

    கேள்வி: படத்தில் இடம் பெற்ற பாடல் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: சின்ன வயதில் இருந்து சாமி கும்பிடுவதை நான் பார்த்து வருகிறேன். இதை பல ஆண்டுகளாக பின்பற்றக்கூடிய எங்களது குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். தெய்வம் தான் இயற்கையின் தூய்மையான ஆற்றல். அந்த ஆற்றலை தான் மக்களுக்கு காட்ட வேண்டும் என்று விரும்பினேன். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=_xmYVXiKhYQ இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    kantara is a film written and directed by actor Rishabh Shetty. After being a huge success in Karnataka, the film has also received good response in Tamil. After the success of the film, the film industry is congratulating the Entire Movie Crew. In this case, Rishabh Shetty, who is multi-talented as an actor, director and writer, gave a special interview to our Filmibeat channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X