'இங்க முத்தம் கொடுத்தாக்கூட யூ தரமாட்டாங்க'... சென்சார் போர்டு பற்றி அர்விந்த் சாமி நச் பேட்டி!

சென்சார் போர்டு வரையரைகள் தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இல்லை என நடிகர் அர்விந்த் சாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: இன்று காலத்தில் சென்சார் போர்டு வகுத்து வரையரைகள் ஒத்துப்போகாது என நடிகர் அர்விந்த் சாமி தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த 'தளபதி' படம் மூலம் அறிமுகமானவர் அர்விந்த சாமி. ரோஜா, பாம்பே, ஹிட் படங்களில் நடித்த அவர் நடுவில் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தார்.

பின்னர் சில ஆண்டுகள் கழித்து, கடல் படம் மூலம் ரீஎண்ட்ரியானார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தியா டுடே பத்திரிகை நடத்திய மாநாட்டில் நடிகர் அர்விந்த் சாமி கலந்துகொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அவன் விவரம் வருமாறு:

அதிர்ஷ்டத்தில் நடிகனானேன்

அதிர்ஷ்டத்தில் நடிகனானேன்

" நான் நடிகனாக வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. அது தற்செயலாக நடந்த விபத்து. காசு கிடைக்கிறதே என விளம்பரப் படங்களில் நடித்து வந்தேன். அதை பார்த்து தளபதி படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார். அதிர்ஷ்டவசமாக அதில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மணிரத்னத்துக்கு தெரியும்...

மணிரத்னத்துக்கு தெரியும்...

எனக்கு என்ன வரும், வராது என்பது மணிரத்னத்திற்கு நன்றாக தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடைய படப்பிடிப்பின் போது தளத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதன் மூலம் தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.

நட்சத்திர அந்தஸ்து பிடிக்கவில்லை

நட்சத்திர அந்தஸ்து பிடிக்கவில்லை

எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் தான் நான் நட்சத்திரமாக ஆனேன். படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதை என்ஜாய் செய்து வேலை பார்த்தேன். ஆனால் இந்த நட்சத்திர அந்தஸ்து எனக்கு அசவுகரியத்தை தந்தது. நட்சத்திர அந்தஸ்து என்னை ஏதோ செய்தது. தனிமையை அனுபவிக்க முடியவில்லை. சுதந்திரமாக எதையும் செய்ய முடியவில்லை.

அமெரிக்கா சென்றுவிட்டேன்

அமெரிக்கா சென்றுவிட்டேன்

அதனால் தான் அதில் இருந்துவிடுபட விரும்பினேன். ரோஜா படத்திற்கு பிறகு அமெரிக்கா சென்று மேல் படிப்பு படித்தேன். அதன் பிறகு ஒரு பிஸினெஸ் செய்தேன். 2005ல் அதை விட்டுவிட்டேன். நான் சிங்கிள் பேரன்ட் என்பதால் குழந்தைகளை பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. பிறகு ஒரு விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டது. இதனால் சினிமாவுக்கு மீண்டும் வருவது பற்றி யோசிக்கவில்லை.

கடல் மூலம் மீண்டும் வந்தேன்

கடல் மூலம் மீண்டும் வந்தேன்

திடீரென ஒரு நாள் கடல் படத்தில் நடிப்பதற்காக மணிரத்னம் கூப்பிட்டார். ஆனால் கடல் படத்துக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதனால் தான் தொடர்ந்து நடிக்கிறேன்.

சென்சார் போர்டு வரையரைகள்

சென்சார் போர்டு வரையரைகள்

சென்சார் போர்டு என்ற அமைப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வகுத்துள்ள வரையரைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை. தமிழ் சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்தால் யூ சான்றிதழ் கிடைக்காது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய படங்களுக்கு யூ சான்று கிடையாது. அதேபோல அன்பை வெளிப்படுத்தும் முத்தக்காட்சிக்கும் அனுமதி கிடையாது.

அரசியல் சென்சார்

அரசியல் சென்சார்

சென்சாரில் அரசியல் இருக்கிறது. இங்க நிறைய கோபக்கார கும்பல் இருக்கிறது. நாங்கள் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்த மாட்டோம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். ஒரு நடிகனின் வேலை மற்றவர்களை காயப்படுத்துவது அல்ல, அவர்களை சிந்திக்க வைப்பது.

போதிப்பது அல்ல சினிமா

போதிப்பது அல்ல சினிமா

சினிமா வேலை போதிப்பது அல்ல. மக்களை சந்தோஷப்படுத்துவது. ஆனால் அதேநேரம், படம் பார்த்த ஒருவர், தனது வீட்டிற்கு என்ன எடுத்து செல்கிறார் என்பதும் முக்கியம். அதேபோல் சர்ச்சைக்குரிய படங்களில் நான் நடிக்க மாட்டேன்.

இவ்வாறு நடிகர் அர்விந்த் சாமி பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X