twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவர் தான் என் குரு அவராலதான் இந்த வெற்றி… விஸ்வா பேட்டி

    |

    சென்னை : சாம்பியன் படம் ரிலீஸாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, அதன் கதாநாயகன் விஷ்வாவை பற்றிய விமர்சனங்கள் நல்ல விதமாகவே வந்துள்ளது. அவரிடம் சில கேள்விகளை கேட்போம்.

    உங்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ?

    https://tamil.filmibeat.com/news/mamangam-producer-says-he-ll-never-forget-persons-who-had-tried-to-disrupt-the-flim-since-its-shoot-065808.html

    சின்ன வயசிலிருந்தே ஸ்போர்ட்ஸ் எனக்கு பிடிக்கும், 3 வயசுல இருந்து நீச்சல் கத்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம் அப்பா ஸ்குவாஷ் விளையாட்டை அறிமுகப்படுத்தினார். அதில இண்டர்நேஷனல் போட்டிகளில் எல்லாம் கலந்து இருக்கேன். என்னுடைய 15 வயசில் சினிமாவில் நுழைய ஆசைபட்டேன். அதனால், குறும்படங்கள் சில எடுத்தேன். அப்புறம் நியூயார்க் ஃபிலிம் அகாடமில ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிச்சி முடிச்சிட்டு இங்கு வந்தேன். 4 வருஷமா முயற்சி பண்ணி நிறைய இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டுடேன் ஆனால், புது முகம் என்பதால யாரும் வாய்ப்பு தரல.

    அப்புறம் R K சுரேஷ் என்னோட தாய் மாமா அவர் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சு இருத்தாரு, இதே மாதிரி ஒரு நிறுவனம் ஆரம்பிக்கலானு நினைச்சேன். சூரி என் குடும்ப நண்பர் அவர் மூலமா சுசீந்திரன் சாரை பார்த்தேன். அப்போது, அவர் சாம்பியன் படத்திற்கு ஆடிசன் எடுத்துக்கொண்டு இருந்தார். நான் ஸ்போர்ட்ஸ் மேன் என்பதால முயற்சி பண்ணிபாக்கலாம்னு, ஃபுட் பால் கோச்சிங் போனேன் ஒரு வருடம் டிரெய்னிங் எடுத்தேன். அப்போ சுசி சார், பையன் படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்கான் இவனை வச்சு படம் பண்ணலாம்னு முடிவு பண்ணி ஓகே சொன்னார். அவர் தான் என் குரு அவராலதான் இன்னைக்கு நான் இங்கு இருக்கேன். இன்னைக்கு எல்லாரும் என்னை பாராட்ட அவர் காரணம். இந்த வெற்றி அவர் கொடுத்ததுதான்.

    சினிமாவை அழிக்க நினைச்ச உங்களை... ஒரு தயாரிப்பாளரின் டச் போஸ்ட்!சினிமாவை அழிக்க நினைச்ச உங்களை... ஒரு தயாரிப்பாளரின் டச் போஸ்ட்!

    இந்தப்படத்தில் உங்களுடைய கதாப்பாத்திரம் எந்த மாதிரியானது ?

    வடசென்னையில் ஒரு ஏழை குடும்பத்து பையன், ஃபுட்பால் விளையாடுற ஆர்வம் உள்ள பையன், ஆனா ஷூ வாங்க, ஜெர்ஷி வாங்க காசு இருக்காது. விளையாடப்போகவே நிறைய பிரச்சனைகள் வரும் அதெல்லாம் தாண்டி எப்படி சாம்பியன் ஆகிறான்கிறது என்பது தான் கதை. அத அப்படியே பிரமாண்டம் சினிமாவுக்கு ஏத்தமாதிரி சொல்லி இருக்கோம்.

    https://tamil.filmibeat.com/news/mamangam-producer-says-he-ll-never-forget-persons-who-had-tried-to-disrupt-the-flim-since-its-shoot-065808.html

    ஃபுட்பால் படம் நிறைய வந்திருக்கு இந்தப்படத்தில் என்ன வித்தியாசம் ?

    சுசி சார் அப்படினாலே ஸ்போர்ட்ஸ் தான், வெண்ணிலா கபடி குழு, ஜீவா. அதே மாதிரி நான் மகான் அல்ல, பாண்டியநாடு ரெண்டும் வேற லெவல் படம், இந்த இரண்டு பலத்தையும் ஒன்னா ஒரே திரைக்கதையில இந்தப்படத்தில தந்திருக்கார். மேலும் இது அப்பா பையன் கதை அப்பாவோட ஆசைய ஒரு பையன் எப்படி நிறைவேற்றுகிறான் என்பது இதோட கதை.

    பிகில் விஜய் நடிப்பில் ஃபுட்பால் படம் இப்போ கதிர் நடிப்பில் ஜடா வந்தது அதைத் தாண்டி இதில் என்ன இருக்கு ?

    அது எல்லாமே பிரம்மாண்டம் அப்புறம் பெரிய ஹீரோக்கள் படங்கள். அப்புறம் கதிர் அண்ணா நடிச்சிருக்கார் எல்லாத்தையும் தாண்டி, ஃபுட்பால் பற்றி சொல்ல இன்னும் நிறைய கதைகள் இருக்கு. வடசென்னையே ஒரு மினி ஃப்ரான்ஸ்தான் ஃபுட்பால் அங்க அவ்வளவு ஃபேமஸ்.

    இதில் ரொமான்ஸ் காமெடி எல்லாம் இருக்கா ?

    இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் இருக்காங்க, ஸ்கூல் கேரக்டர்ல சௌமிகானு ஒரு புது முகம் நடிச்சி இருக்காங்க. அப்புறம் டப்மாஸ் மிருணாளினி காலேஜ் லவ்வரா வர்றாங்க அவங்க இந்தப்படத்தில் இருக்குறது பெரிய ஸ்பெஷல்.

     Champion Vishwa interview

    ஸ்கூல், காலேஜ் ரெண்டும் நீங்களே பண்ணியிருக்கீங்க ?

    ஆமா சார் 5 வயசு பையனா ஒரு சின்ன பையன் பண்ணியிருக்கார் ஸ்கூல், காலேஜ் கேரக்டர் நான் பண்ணியிருக்கேன்.

    அப்பா ஆசைய நிறைவேற்றுற பையன் தான் கதையா ?

    அப்படி மட்டும் சொல்லிட முடியாது. அதுவும் ஒரு நாட். அப்பாவா மனோஜ் பாரதி சார் நடிச்சிருக்கார் அவர் இந்தப்படத்துக்கு பெரிய ஆசிர்வாதம். அவர் ஆசைய நிறைவேற்றுவதில் என்ன தடங்கல் வருது, அப்புறம் நரேன் சார் எப்படி உள்ள வராரு இதெல்லாம் தான் கதை. நரேன் சார் முக்கியமான கேரக்டர் பண்ணியிருக்கார். அப்புறம் கமர்ஷியல் அம்சமும் இதில் இருக்கு எல்லாத்தையும் கலந்து கொடுத்திருக்கார் சுசி சார்.

    நரேனுக்கு இந்தப்படத்தில் என்ன கேரக்டர் ?

    நரேன் சார் கோச்சா வர்றாரு, அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ மாதிரி. நாலைந்து முக்கிய பாத்திரங்கள் இந்தப்படத்தில் இருக்கு நரேன் சார் ஒத்துகிட்டு நடிச்சதே பெரிய விசயம் ஒரு புது பையன் போஸ்டர்ல நடுவுல இருக்கும்போது ஓரமா இருக்க பெரிய மனசு வேணும்.

    ஷூட்டிங் எங்க நடந்தது ?

    புழல் , செம்மஞ்சேரி சென்னையை சுற்றி தான் எல்லாமே பண்ணிருக்கோம்.

    சினிமாவில் வர என்ன காரணம் ?

    9 to 5 வேலை மேல எனக்கு விருப்பம் இல்ல. சினிமாவில் நிறைய அனுபவம் கிடைக்கும். இப்ப சாம்பியன் படத்துல நான் ஃபுட்பால் பிளேயர். ஒரு பிளேயரோட நான் வாழுறேன் அனுபவம் எனக்கு கிடைக்கும். அடுத்த படத்தில் பிச்சைக்காரனா நடிக்கலாம் அப்போ அவங்களோட அனுபவம் என் உடம்புக்குள் கிடைக்கும் இது எனக்கு பிடிச்சிருக்கு. அதனால எனக்கு சினிமாவை பிடிச்சிருக்கு. '

    உங்களுக்கு கோச்சிங் தந்தவர் என்ன சொன்னார் படம் பார்த்து ?

    அவரும் இந்த படத்தில் நடிச்சிருக்கார். படம் பார்த்து நீ கஷ்டபட்டதுக்கு பலன் கண்டிப்பா கிடைக்கும்னு சொன்னாரு. அவருக்கு இந்த படம் பிடிச்சி இருக்கு.

    டயலாக் டெலிவரி, வடசென்னை பாஷை எப்படி பண்ணீங்க ?

    எனக்கு நடிக்கவே தெரியாது. சுசி சார் பயங்கரமா நடிப்பாரு, அவர் நடிக்க சொல்லிக்கொடுக்கிறத கொஞ்சம் பண்ணிணாலே போதும் நல்லா வந்துடும்.

    நீங்க பாடல் பாடியிருக்கீங்களே ?

    எனக்கு இசை மேல காதல். 300 பாடல்களுக்கு மேல போட்டு வச்சிருக்கேன் ஒரு நாள் இத கேள்விப்பட்டு சுசி சார் கேட்டார் அவருக்கு போட்டு காட்டினேன் அப்புறம் படத்துல அவர் தான் பாட வச்சார்.

    ஃபுட்பால் குரு யார் ?

    எனக்கு டிரெய்னிங் கொடுத்த சாந்த குமார் சார் தான் அவர் ஏழைப்பசங்கள் நிறைய பேருக்கு கத்து கொடுத்து வளர்த்து விட்டுருக்காரு. அவரோட பேரைத்தான் நரேன் சாருக்கு வச்சிருக்கோம். அவரோட கேரக்டர் தான் நரேன் சார் பண்ணியிருக்காரு.

    அடுத்த படம் இசையமைப்பீங்களா ?

    அது தானா அமையனும் நம்மலா பண்ணக்கூடாது இப்போ நடிக்க வந்திருக்கேன் அதுல முதல்ல ஒழுங்கா பண்ணனும் நல்ல நடிக்கனும் அப்புறம் பாக்கலாம். இப்ப சாம்பியன் படம் பாத்துட்டு நல்லா இருக்குன்னு விமர்சனம் வருது. என் நடிப்பை பாத்துட்டு நிறைய பேர் பாராட்டி இருக்காங்க எல்லோருக்கும் நன்றி.

    Read more about: interview பேட்டி
    English summary
    Champion Vishwa interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X