எந்த தைரியத்தில் 'அந்த' காட்சியில் நடித்தேன்?: சாந்தினி விளக்கம்
சென்னை: வஞ்சகர் உலகம் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்தது பற்றி சாந்தினி விளக்கம் அளித்துள்ளார்.
சித்து +2 படம் மூலம் நடிகையானவர் சென்னை பெண்ணான சாந்தினி தமிழரசன். தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் அண்மையில் வெளியான வஞ்சகர் உலகம் படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

படுக்கையறை காட்சி
இயக்குனர் மனோஜ் பீதா வஞ்சகர் உலகம் படத்தின் கதையை 2 மணிநேரம் கூறினார். அப்போதே அவர் படத்தில் படுக்கையறை காட்சி உள்ளது என்று மறைக்காமல் தெரிவித்தார். தெரிந்து தான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். இயக்குனர் மற்றும் படக்குழு மீது இருந்த நம்பிக்கையில் அந்த காட்சியில் துணிந்து நடிக்க ஒப்புக் கொண்டேன்.

பாவம்
கல்லூரியில் படித்தபோதே படங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. படித்துக் கொண்டிருந்தபோது ஒரு குறும்படத்தை இயக்கி அதில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த குறும்படத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்தார்.

சித்து +2
சித்து +2 படம் மூலம் ஹீரோயின் ஆனேன். பாக்யராஜ் சார் எனக்கு அந்த வாய்ப்பை அளித்தார். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நான் 3 தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் 3 தெலுங்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். பட வாய்ப்புகள் குறைவில்லாமல் வருகிறது.

பாலியல் தொல்லை
சினிமா துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி எந்த தொல்லையும் இல்லை. சொல்லப் போனால் சினிமா உலகம் பாதுகாப்பானதாக உள்ளது. இதுவரை யாரும் எனக்கு பாலியல் தொல்லை அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் சாந்தினி.


Click it and Unblock the Notifications











