»   »  கல்யாண ஐடியாவே இல்லை: சார்மி

கல்யாண ஐடியாவே இல்லை: சார்மி

Subscribe to Oneindia Tamil

எனக்கும், தெலுங்குப் படஇயக்குநர் ஒருவருக்கும் காதல் என்று யாரோ எனக்கு வேண்டாத சிலர் வதந்திகிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு யாருக்கும் கழுத்தை நீட்டும் ஐடியாவே என்னிடம்இல்லை என்கிறார் சார்மி.

டி.ராஜேந்தரின் கண்டுபிடிப்பு சார்மி. காதல் அழிவதில்லை என்ற படம் மூலம் சினிமாவுக்கு வந்த சார்மி, வந்தபுதிதில் படு வாளிப்பாக இருந்தார். இப்போதோ படு ஊது ஊதி விட்டார். இருந்தாலும் சார்மியின் கிளாமருக்குதெலுங்கு ரசிகர்கள் அடிமையாகிக் கிடக்கிறார்கள்.

தனது மத மத உடலுடன், ஜகஜால கிளாமரில் தெலுங்கைக் கலக்கி வருகிறார் சார்மி. அவர் படத்தில் இருந்தால்போட்ட பணத்தை படம் எடுத்து விடும் என்ற நம்பிக்கை தெலுங்குப் படத் தயாரிப்பாளர்களிடம் உள்ளதால்,சார்மி கை நிறையப் படங்கள்.

வெறும் கிளாமரை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பின்னி எடுத்து வரும் சார்மியைப் பற்றி திடீரென ஒருவதந்தி கிளம்பியது. தெலுங்குப் பட இயக்குநரை காதலிக்கிறார், சீக்கிரமே கல்யாணம் செய்யப் போகிறார்என்பதே அந்த செய்தி.

இதைக் கேட்டால், சார்மி கடுப்பாகி விடுகிறார். காலில் சிறு காயம் ஏற்பட்டு விட்டது. இதற்காக சில நாள்வீட்டில் ஓய்வாக இருந்தேன். அதற்குள் யாரோ இப்படி கிளப்பி விட்டு விட்டார்கள்.

காதலும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை. யாருக்கும் கழுத்தை நீட்டும் ஐடியாவும் இப்போதைக்கு இல்லை.இன்னும் நிறைய சாதிக்கணும் சார். கிளாமர் மட்டும்தான் செய்யத் தெரியும் சார்மிக்கு என்ற பெயரை மாற்றிநல்ல நல்ல கேரக்டர்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். இப்போது போய் நான் கல்யாணம் செய்துகொள்வேனா என்று குமுறித் தள்ளி விட்டார்.

அதானே!

Read more about: no marriage for now, says charmi
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil