விஷால் நல்லா இருப்பதைப் போல் நடிக்கிறாரா? கொளுத்திப்போட்ட பிரபலம்!

சென்னை: நடிகர் விஷால் மத கஜ ராஜா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது மேடையில் கை நடுக்கத்துடன் பேசியது பெரும் பரபரப்பானது. அப்போது, அவருக்கு வைரல் காய்ச்சல் இருந்தது தான் அந்த நடுக்கத்துக்கு காரணம் என விஷால் விளக்கம் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாவைவில் திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்ட விஷால், திடீரென மயங்கி விழுந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், சமூக வலைத்தளங்களில் பல விதமான விமர்சனங்கள் பரவின. விஷாலின் உடல் நிலை இந்த அளவிற்கு மோசமானத்திற்கு காரணம் அவரது குடிப்பழக்கம் தான் என்று பலவிதமான செய்திகள் பரவியதை அடுத்து, அவருடைய மேலாளர் ஹரி, விஷாலின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை. அவர் மதிய உணவு சாப்பிடாமல் ஜூஸ் மட்டுமே குடித்திருந்தார். அதன் காரணமாக தான் சோர்வாகி விஷால் மயங்கி விழுந்தார் என கூறியிருந்தார். இதையடுத்து பேட்டி அளித்த விஷால், நான் குடிப்பதை நிறுத்தி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்றும், மேலும் புகை பிடிப்பதை ஐந்து வருடங்களுக்கு முன்பே விட்டுவிட்டேன் என்றும் கூறியிருந்தார்.

எல்லாம் நடிப்பா: இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நடிகர் விஷால் அவர்கள் 12 ஆண்டு வருடங்களுக்கு முன் நடித்த மத கஜ ராஜா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கை நடுங்கியபடி பேசியது பலவிதமான சர்ச்சைகளையும் கிளப்பியது. அவர், ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று பலரும் இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால், படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக கூட விஷால் அப்படி நடிந்து இருக்கலாம் என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால், நான்கு நாள் கழித்து அவர் முழுமையாக குணமடைந்து வந்திருந்தார்.

vishal health che guevara

கவனம் தேவை: ஆனால், தற்போது அவர் விழாவில் மயங்கி விழுந்திருக்கிறார். அப்படி என்றால் அன்று வைரல் ஃபீவர் என்று சொன்னது நடிப்பா... அல்லது இப்போது நடிக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்பது தெரிந்தால், பட வாய்ப்பு வராது என்பதற்காக நன்றாக இருப்பது போல விஷால் நடிக்கிறாரா என்ற பல சந்தேகங்கள் மனதுக்குள் எழுதுகிறது. சிலருக்கு அதிக கூட்ட நெரிசல் உள்ள இடத்தில் இருந்தால் மூச்சு முட்டும், இப்படி தள்ளுமுள்ளு நடக்கும்போது, உடல்நிலை பாதிக்கப்படலாம். ஆனால், விஷால் பங்கேற்ற விழாவின் சூழ்நிலை எப்படியிருந்தது தெரியவில்லை. மயக்கம் வந்துள்ளது.. மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் உடல்நிலை தேறி வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார். எது எப்படியாக இருந்தாலும், விஷால் தனது உடல்நிலையை கவனித்துக்கொள்ள வேண்டும், அதுதான் அவருக்கும் சினிமாவிற்கும் நல்லது என்று அந்த பேட்டியில் சேகுவேரா பேசி உள்ளார்.

நடிகர் விஷால், நடிகராக மட்டுமில்லாமல் நடிகர்இ சங்கத்தில் பொது செயலாளராகவும் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக 12 ஆண்டுகளுக்கு பின் வெளியான மத கஜ ராஜா படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. தற்போது நடிகர் விஷால் பிஸியாக படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X