பணம் பறிக்கும் வேலை.. 7வருஷம் கழிச்சி எதுக்கு இந்த நாடகம்.. பாடகி ஸ்வாகதாவை விளாசிய சேகுவேரா
சென்னை: பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், இரண்டு எழுத்து இசையமைப்பபாளர் ஒருவர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். பாலியல் அத்துமீறலுக்கு பின் சென்னையை விட்டு ரிஷிகேஷ் சென்றுவிட்டதாக கண்ணீர் மல்க கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய சினிமா விமர்சகர் சேகுவேரா அந்த பாடகியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா உள்பட பல படங்களில் பாடியவர் ஸ்வாகதா. இவர் அண்மையில் அளித்த பேட்டியில், 7 வருடத்துக்கு முன் இசையமைப்பாளரின் ஸ்டூடியோவில் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். அந்த அறையில் சத்தம் போட்டால் வெளியில் கேட்காது. அந்த இடத்தில் நடந்த அனைத்தும் ரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயத்தை வெளியில் சொல்லாக்கூடாது என என்னை பிளாக்மெயில் செய்தார். என்னைப் போன்று பல பெண்களுக்கும் அதே அறையில் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது. அந்த இரண்டு எழுத்து இசையமைப்பாளர் யார் என்பதை நான் ஆதாரத்துடன் விரைவில் அறிவிப்பேன் என பேசி இருந்தார். பிரபல பாடகி இப்படி சொன்னது இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் பலரும் யார் அந்த இசையமைப்பாளர் என கேட்டு வருகின்றனர்.

சேகுவேரா: இதுகுறித்து சினிமா விமர்சகர் Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் செய்யவேண்டியது என்னவென்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும், நீதிமன்றம் செல்ல வேண்டும் அதற்காக பல பெண்கள் அமைப்புகள் இருக்கின்றன. ஆனால், ஊடகங்களை கத்தி மாதிரி பயன்படுத்துவது, ஊடகங்களில் அமர்ந்து கொண்டு பிரபலமானவர்களை அசிங்கப்படுத்துவது சரியில்லை.
பணம் பறிக்கும் நோக்கம்: இந்த சம்பவம் நடந்து ஏழு ஆண்டாகிவிட்டது, ஏழு வருடம் கழித்து இந்த விஷயத்தை சொல்வதற்கான காரணம் என்ன? இப்போது அந்த இசையமைப்பாளர் கோடியில் சம்பளம் வாங்கும் இசையமைப்பாளராக இருக்கிறார். இதனால், அவரிடமிருந்து பணத்தை பறிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் பாடகி ஸ்வாகதா இப்போது இந்த பிரச்சனை பற்றி பேசி இருக்கிறார். இதற்காக அந்த இசையமைப்பாளர் நல்லவர், யோக்கியமானவர் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஆனால், அந்த பாடகி சொன்ன குற்றச்சாட்டை ஒருதலைப் பட்சமாக எடுத்துக்கொண்டு பேசக்கூடாது. இது குறித்து சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரிடம் கேட்டால்தான் இந்த பாடகி ஸ்வாகதா என்ன செய்தார் என்பது தெரியவரும்.
டுபாக்கூர்: காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார், அவரது மனைவி மன்னிப்பு கேட்டார் என பல விஷயத்தை சொல்லும் அந்த பாடகி இசையமைப்பாளரின் பெயரை மட்டும் ஏன் சொல்லவில்லை. பெயரை சொல்லிவிடுவேன் என பயமுறுத்தினால், அவர் பேச்சுவார்த்தைக்கு வருவார், அப்போது தான் அவரிடம் இருந்து பணத்தை கறக்க முடியும். அதற்காகத்தான் 7 வருடத்திற்கு முன் நடந்ததை இப்போது பேசி இருக்கிறார். ஒரு பெண் குற்றச்சாட்டை சொல்லும்போது இதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும், பெண் இந்த விஷயத்தில் பொய் சொல்லமாட்டாள் என அவளுக்கு ஆதரவாக பலர் பேசுவார்கள். இப்படித்தான் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் தொகுப்பாளினி சிவகங்கரிக்கு இதுபோன்ற பாலியல் சர்ச்சை குறித்து பேசினால் தான் வியூஸ் போகும் என்பதால் தொடர்ந்து இது போன்ற வேலைகளை அவர் செய்து வருகிறார். பாடகி ஸ்வாகதா, சிவகங்கரி இருவருமே டுபாக்கூர் என சேகுவேரா பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications