மேனேஜர் பேர ஏன் சொல்லல? முருகதாஸ், லிங்குசாமி பெயரைப்பயன்படுத்தி ஸ்வாசிகா சீப்பப்ளிசிட்டி.. சேகுவேரா

சென்னை: நடிகை ஸ்வாசிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற 'நூறு சாமி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில், யூடியூப் சேனல் ஒன்றில் நடிகை ஸ்வாசிகா அளித்த பேட்டி ஒன்று தற்போதைய கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையையும் புயலையும் கிளப்பியுள்ளது.

நடிகை ஸ்வாசிகா: நான் தமிழ் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தன்னை சினிமா 'மேனேஜர்' என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர், நீங்கள் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், டாப் இயக்குநர்களான ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியை நேரில் சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எனக்குப் பெரிய இயக்குநர்களின் படங்களில் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசையில், என் அம்மாவிடம் பேசி எங்களிடம் இருந்த நகையையெல்லாம் அடமானம் வைத்து 1 லட்சம் ரூபாய் பணத்தை ஏற்பாடு செய்தேன். அவர் சந்திக்கச் சொன்ன ஹோட்டலுக்குப் பணத்தோடு போனேன். ஆனால், அந்த ஹோட்டலில் இயக்குநர்களும் இல்லை, என்னிடம் பணத்தை வாங்கிய அந்த மேனேஜரும் இல்லை. அந்த மேனேஜர், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கூடப் பணம் கட்டாமல் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் என்று ஸ்வாசிகா பேசி தெரிவித்தார்.

Swastika Che Guevara interview
Photo Credit:

பெரிய நடிகை இல்லை: ஸ்வாசிகாவின் இந்த பேட்டி குறித்துச் சினிமா விமர்சகர் சேகுவேராவிடம் கேட்டபோது, நடிகையின் இந்த ஸ்டேட்மெண்ட் டுபாக்கூர் ஸ்டேட்மென்ட். மற்ற நடிகைகள் எல்லாம் தைரியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயத்தை வெளியில் சொல்கிறேன் என்று அந்த நடிகை காரணம் சொல்கிறார். முதலில் இந்த நடிகை ஒன்றும் பெரிய நடிகை எல்லாம் இல்லை. இவர் தமிழில் நடித்ததே வெறும் நாலு படம் தான். அதிலும் முக்கியமான ரோலிலும் அவர் நடிக்கவில்லை. 'நூறு சாமி' திரைப்படத்தில் தான் லீட் ரோலில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்திலும் கூட இரண்டு நடிகைகள் இருக்கிறார்கள்.

சீப்பான விளம்பரம் : மற்றவர்களுக்குத் தைரியம் வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயத்தைச் சொல்கிறேன் என்று சொன்ன ஸ்வாசிகா, பிரபலமான இயக்குநர்களான லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரின் பெயர்களை வெளிப்படையாகச் சொன்னார். ஆனால், அவரிடம் பணத்தைப் பறித்துக் கொண்டு ஏமாற்றிய அந்த மேனேஜரின் பெயரை ஏன் சொல்லவில்லை? நீங்க தான் அவ்வளவு தைரியமான ஆளாச்சே... அப்படி இருக்கும்போது எதற்காக அந்த மேனேஜரின் பெயரை மறைக்க வேண்டும்? இது அந்த நடிகை தனது சுய விளம்பரத்திற்காக, மிகவும் சீப்பான முறையில் செய்த வேலை தான். உண்மையில் இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நிஜமாகவே நடந்திருந்தால், நிச்சயமாக மோசடி மேனேஜரின் பெயரை வெளியில் சொல்லியிருப்பார் என்று சேகுவேரா தனது பேட்டியில் நடிகை வெளுத்து வாங்கி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X