ரெண்டு பேரும் டுபாக்கூர்.. சின்னத்திரை சீரழிந்துவிட்டது.. ரிஹானாவுக்கு பணத்தாசை.. விளாசிய பிரபலம்!

சென்னை: விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தியாகவும், பொன்னி சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிஹானா பேகம். இவர், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தொழிலதிபர் ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து நடிகை ரிஹானா, அவர் தான் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என பேட்டியில் கூறியிருக்கும் நிலையில், இதுகுறித்து பத்திரிக்கையாளர் சேகுவேரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர்கள் இருவரின் பிரச்சனையை பற்றி தான் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதில், யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பதை கண்டுபிடிப்பதற்கு உண்மை கண்டறியும் கருவியைத்தான் வைக்க வேண்டும். இதில், இரண்டு பேருமே டுபாக்கூர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. தொழிலதிபர் என்று கூறப்படும் ராஜ் கண்ணன், அந்த நடிகை எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டேன் என்று சொன்னதால் திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார். விவகாரத்துக்கு பெற்றுவிட்டார் என்பதற்காக குறைந்தபட்சம் எந்தவித டாக்குமெண்ட்டையும் பார்க்காமல் இவர் எப்படி திருமணம் செய்து கொண்டார். பணம் கொடுத்தேன் ஏமாற்றிவிட்டார் என அதற்கான ஆதாரத்தை காட்டும் தொழிலதிபர், விவாகரத்து செய்ததற்கான ஆதாரத்தை ஏன் பார்க்கவில்லை. அந்த நடிகையிடம் எதையும் எதிர்பார்க்காமலா பணத்தை கொடுத்தார்.

Reehana Begum Pandian Stores
Photo Credit:

ரெண்டு பேருமே டுபாக்கூர்: கணவனை இழந்தவர்கள், விவகாரத்தான பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் இவர்கள் இருவருமே முறைகேடாக வாழ்ந்து விட்டு, இப்போது மீடியாக்களில் வந்து பஞ்சாயத்து பேசுகிறார்கள். அந்த நடிகை என்னை அவர் மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என்று சொல்கிறார். ஆனால், அந்த புகைப்படத்தை பார்க்கும்போது சிரித்துக்கொண்டு இருக்கிறார். மிரட்டி திருமணம் செய்யும்போது எப்படி அந்த நடிகை சிரித்துக்கொண்டே இருப்பார்கள். இதனால், தான் இவர்கள் இருவருமே டுபாக்கூர் என்று நான் சொல்கிறேன்.

பணத்திற்காக : தொழிலதிபர் ராஜ் கண்ணன் ரகசியமாக ஒரு வீட்டில் நடிகையை திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அந்த நடிகை அவருக்கு மனைவிதானே. மனைவி தன்னிடம் பேசியதை அவர் எப்படி பதிவு செய்தார். இப்படி என்றால், இருவரும் அந்தரங்கமாக இருந்ததை கூட வீடியோவைக்கூட பதிவு செய்து வைத்து இருக்கலாம். இன்று அவர், தன்னை நல்லவனாக காட்டிக் கொள்வதற்காக இப்படி சில விஷயங்களை செய்து வருகிறார். ராஜ் கண்ணன் 18 லட்சம் கொடுத்தார் என்கிறார், நடிகையோ நான் 18 லட்சம் கொடுத்தேன் என்கிறார். இந்த நடிகையும் பணத்திற்காகத்தான் அவரிடம் பழகினார் தெளிவாக தெரிகிறது.

சின்னத்திரை சீரழிந்துவிட்டது: முன்பெல்லாம் பெரிய திரையில் இருக்கும் நடிகைகள் தான் மோசமானவர்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது சின்னத்திரையும் கெட்டு சீரழிந்து இருக்கிறது என்பது அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகளை பார்க்கும்போது நன்றாக தெரிகிறது. இதற்காக நடிகைகள் அனைவரும் இப்படி செய்கிறார்கள் என்று சொல்ல முடியாது. சில நடிகைகள் தன்னுடைய இளமை இருக்கும் நேரத்திலேயே நன்றாக சம்பாதித்து செட்டில் ஆகி விட வேண்டும் என்பதற்காக இப்படி அசிங்கமான செயல்களை செய்கிறார்கள் என்று பத்திரிக்கையாளர் சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X