மணிமேகலைக்கு ஏது இவ்வளவு பணம்? ஒரு பெண் சொத்து வாங்குனா ஏன் வயிறு எரியுது? சேகுவேரா பதிலடி!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் மணிமேகலையும், அவரது கணவர் உசேனும் அண்மையில் தங்களது கனவு இல்லத்தைக் கட்டி புதுமனை புகுவிழா நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்களது யூடியூப் சேனலில் 'ஹோம் டூர்' வீடியோ வெளியிட்டு இருந்தனர். பிரம்மாண்டமான நுழைவாயில் கதவு, சொகுசான வரவேற்பறை, அதிநவீன சமையலறை, சொகுசு படுக்கையறை மற்றும் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த அழகான தோட்டம் என அந்த வீடு ஒரு டாப் ஸ்டார் நடிகரின் பங்களா போலவே காட்சியளித்தது.

தொகுப்பாளினி மணிமேகலை: இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் சிலர், ஒரு தொகுப்பாளினிக்கு எப்படி இவ்வளவு பிரம்மாண்டமான வீடு கட்ட பணம் வந்தது? என அடுத்தடுத்து சந்தேகங்களையும், விமர்சனங்களையும் எழுப்பினார்கள். இதுகுறித்து பேசிய பிரபல சினிமா விமர்சகர் சேகுவேரா, ஒரு பெண் சொந்தமாக வீடு கட்டிவிட்டார் என்பதற்காகவே அவரைத் தவறான பார்வையோடு பார்ப்பது மிகவும் வக்கிரமான குணம். ஒருவருக்குச் சொத்துக்கள் பல்வேறு வழிகளில் வரக்கூடும். அவர்களுக்குப் பரம்பரைச் சொத்துக்கள் இருந்திருக்கலாம், அந்தப் பரம்பரைச் சொத்துக்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்த போது அதை விற்றுப் புது வீடு கட்டியிருக்கலாம். அல்லது, அவரது கணவர் உசேன் சம்பாதித்திருக்கலாம். இல்லையெனில், குடும்பத்தில் நடந்த பாகப்பிரிவினை மூலமாகக் கூடப் பணம் வந்து இருக்கலாம்.

பொறாமையில் பேசக்கூடாது: ஒரு நடிகையோ அல்லது பெண் பிரபலமோ சொத்து வாங்கிவிட்டாலே உடனே அதன் பின்னணியில் சந்தேகத்தைக் கிளப்புவது என்பது மிகவும் தவறான விஷயம். பல பேருக்குப் பல வழிகளில் பணம் மற்றும் சொத்துக்கள் வரும், அதற்காக அனைத்தையும் தவறாக பேசக்கூடாது. மணிமேகலை ஏதோ நேற்று வந்து இன்று பிரபலம் ஆனவர் இல்லை. அவர் கடந்த பல வருடங்களாகத் தொலைக்காட்சித் துறையில் முன்னணி தொகுப்பாளினியாக கடுமையாக உழைத்து வருகிறார். குறிப்பாக விஜய் டிவியின் டாப் ஷோக்களில் பணியாற்றியுள்ளார். அப்படியிருக்கும் போது, ஒரு பெண் முன்னேறுவதைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக்கொண்டு, எதைப் பற்றியும் முழுமையாகத் தெரியாமல் இப்படித் தேவையில்லாமல் விமர்சனம் செய்யக் கூடாது என மணிமேகலைக்கு ஆதரவாகச் சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார் சேகுவேரா.


Click it and Unblock the Notifications