»   »  இது கனவு கண்ணாடி- சேரன்

இது கனவு கண்ணாடி- சேரன்

Subscribe to Oneindia Tamil

நவ்யா நாயருடன் சேர்ந்து நடித்து வரும் மாயக்கண்ணாடியை இழைத்து இழைத்து உருவாக்கி வருகிறார் சேரன்.

சேரனும், நவ்யா நாயரும் இணைந்து நடித்து வரும் படம் மாயக் கண்ணாடி. படு நிதானமாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதற்கு சேரன் தரப்பு சொல்லும் காரணம், படத்தின் கதை அப்படி, நிதானமாக இழைத்து வருகிறார்சேரன். இதனால்தான் படத்தை முடிக்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

நிதானமாக வளர்ந்தாலும் படு அற்புதமாக வந்திருக்கிறதாம் மாயக்கண்ணாடி. குறிப்பாக இசைஞானிஇளையராஜாவின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது என்கிறார்கள். அட்டகாசமான பின்னணிஇசையைக் கொடுத்துள்ள ராஜா, பாடல்களில் பின்னி எடுத்திருக்கிறாராம்.

இதைச் சொல்லி சொல்லி சந்தோஷப்படுகிறார் சேரன். அதேபோல நவ்யா நாயர் வரும் காட்சிகள் படு ரம்யமாகவந்திருக்கிறதாம். நவ்யா நாயரை இதுபோல அழகாக எந்தப் படத்திலும் காட்டியதில்லை என்று பெருமையாகசொல்கிறது மாயக்கண்ணாடி வட்டாராம்.

படத்தின் விசேஷம் என்னவோ? ஒவ்வொரு மனிதனுக்கும் கனவுகள் இருக்கும். அது பிம்பமாக இதயத்தில்நிறைந்திருக்கும். ஆனால் அத்தனையும் நிறைவேறி விடுகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

நாம் நினைக்கும் கனவுகளில் 10 சதவீதம்தான் நிறைவேறும். மற்றவை கானல் நீராகவே இருக்கும். ஒரு சாதாரணமனிதனாக, பாமரனாக நான் கண்ட கீழ் நடுத்தர வர்க்கத்து ஏக்கங்களையும், கனவுகளையும் இப்படத்தில்பிரதிபலித்துள்ளேன். அதுதான் மாயக்கண்ணாடியாக மக்கள் முன் காட்சி தரப் போகிறது என்கிறார் சேரன்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக வேறு படங்களுக்கு கால்ஷீட் தராமல் உள்ளாராம் நவ்யா. அந்த அளவுக்குஒன்றிப் போய் விட்டாராம். ஒவ்வொரு காட்சியையும் சேரன் எடுக்கும் விதம் நவ்யாவை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம். இதனால்தான் இப்படத்தை முடிக்கும் வரை வேறு படத்தில் நடிப்பதில்லை என்று உறுதியாகஇருக்கிறாராம்.

அத்தோடு தனது காட்சிகள் இல்லாவிட்டாலும் கூட சேரன் படம் எடுக்கும் அழகை ரசிப்பதற்காக ஸ்பாட்டில்இருக்கிறாராம் நவ்யா. கிட்டத்தட்ட ஷூட்டிங் முழுவதும் அவரும் இருக்கிறார் என்கிறார்கள்.

கண்ணாடி உடையாம இருந்தா சரி!

Read more about: mayakannadi shooting is on

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil