»   »  நடிகையை அடிக்கவில்லை-சேரன் துணை நடிகை செல்போனில் பேசியாதல் அவரை கண்டித்து செட்டை விட்டு வெளியே அனுப்பினேன்.அவ்வளவு தான் நடந்தது. அவரை அடிக்கவில்லை என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.மாயக்கண்ணாடி படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்து, படத்தை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக நவ்யாநாயர் நடிக்கிறார். இவருவருக்கும் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பியூட்டிபார்லாரில் நடந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ப்ரியா என்ற துணை நடிகை செல்போனில்பேசியதால் அவரை சேரனும், நவ்யா நாயரும் அடித்தாகக் கூறப்படுகிறது.இது பற்றி சேரன் கூறுகையில்,ஒரு நாளைக்கு ரூ. 75,000 பணம் கட்டி படப்பிடிப்பை நடத்திக் கொண்டு இருக்கிறோம். படப்பிடிப்பின் போதுயாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது என சுய கட்டுப்பாடு வைத்திருக்கிறோம்.ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்த ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போதும் நாங்கள் யாரும்செல்போன்களை பயன்படுத்தியது இல்லை. அதே போல் மாயக்கண்ணாடி படப்பிடிப்பின் போதும் யாரும்செல்போனை பயன்படுத்து கூடாது என்று கேட்டுக்கொண்டேன். எல்லோருமே அதற்கு சம்மதம் அளித்துசெல்போனில் பேசுவதில்லை.துணை நடிகை ப்ரியா என்று குறிப்பிடப்படுபவர் துணை நடிகையே அல்ல. பியூட்டி பார்லர் சம்பந்தப்பட்ட காட்சிஎன்பதால் ஆடம்பரமான தோற்றம் உள்ள பெண் தேவைப்பட்டார். அவர் வெளியே எங்கோ வேலை செய்பவர்.வீட்டுக்கு தெரியாமல் பாக்கெட் மணிக்காக நடிக்க வந்து இருக்கிறார்.அவர் படப்பிடிப்பின்போது அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். உடனே நான் உதவி டைரக்டரைஅழைத்து செல்போனில் பேசக்கூடாது என்று என சொல்ல சொன்னேன். உதவி டைரக்டர் சொன்ன பிறகும் அவர்செல்போனில் பேசி கொண்டிருந்தார்.நவ்யா நாயர் சம்பந்தப்பட்ட காட்சியை நான் டைரக்டு செய்து கொண்டு இருந்த போது அவர் செல்போனில்மீண்டும் பேசினார். போனிலேயே யாருக்கோ முத்தம் கொடுத்தார். இதனால் அனைவரின் கவனமும் அந்தபெண் பக்கம் சென்றது. சூட்டிங்கிற்கு இடைஞ்சலாக இருந்தது.இதனால் எனக்கு கோபம் வந்தது. ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுத்து படப்பிடிப்பு நடத்துகிறோம். ஒவ்வொருநிடமிடமும் எங்களுக்கு முக்கியம். இப்படி இடையில் தெந்தரவு கொடுத்ததால் கோபம் வந்து அந்த பெண் யார்,அவரை உடனே வெளியே அனுப்புங்கள் என்று சத்தம் போட்டேன்.பிறகு மானேஜர் வந்து அந்த பெண்ணை வெளியே அழைத்து சென்றார். இது தான் நடந்தது. அனால் ஒரு துணைநடிகையை அடிக்கும் அளவுக்கு நானோ, நவ்யா நாயரோ தரம் தாழ்ந்து போய்விடவில்லை.தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை பற்றி தெரியும் ஒரு பெண்னை அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்றார் சேரன் படபடவென.இந்த விஷயத்தில் அடிபடும் முக்கிய நபரான நவ்யா நாயர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய்விட்டதால்அவரது தரப்பின் கருத்தை அறிய முடியவில்லை. துணை நடிகையை தாக்கிய நவ்யா-சேரன்

நடிகையை அடிக்கவில்லை-சேரன் துணை நடிகை செல்போனில் பேசியாதல் அவரை கண்டித்து செட்டை விட்டு வெளியே அனுப்பினேன்.அவ்வளவு தான் நடந்தது. அவரை அடிக்கவில்லை என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.மாயக்கண்ணாடி படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்து, படத்தை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக நவ்யாநாயர் நடிக்கிறார். இவருவருக்கும் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பியூட்டிபார்லாரில் நடந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ப்ரியா என்ற துணை நடிகை செல்போனில்பேசியதால் அவரை சேரனும், நவ்யா நாயரும் அடித்தாகக் கூறப்படுகிறது.இது பற்றி சேரன் கூறுகையில்,ஒரு நாளைக்கு ரூ. 75,000 பணம் கட்டி படப்பிடிப்பை நடத்திக் கொண்டு இருக்கிறோம். படப்பிடிப்பின் போதுயாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது என சுய கட்டுப்பாடு வைத்திருக்கிறோம்.ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்த ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போதும் நாங்கள் யாரும்செல்போன்களை பயன்படுத்தியது இல்லை. அதே போல் மாயக்கண்ணாடி படப்பிடிப்பின் போதும் யாரும்செல்போனை பயன்படுத்து கூடாது என்று கேட்டுக்கொண்டேன். எல்லோருமே அதற்கு சம்மதம் அளித்துசெல்போனில் பேசுவதில்லை.துணை நடிகை ப்ரியா என்று குறிப்பிடப்படுபவர் துணை நடிகையே அல்ல. பியூட்டி பார்லர் சம்பந்தப்பட்ட காட்சிஎன்பதால் ஆடம்பரமான தோற்றம் உள்ள பெண் தேவைப்பட்டார். அவர் வெளியே எங்கோ வேலை செய்பவர்.வீட்டுக்கு தெரியாமல் பாக்கெட் மணிக்காக நடிக்க வந்து இருக்கிறார்.அவர் படப்பிடிப்பின்போது அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். உடனே நான் உதவி டைரக்டரைஅழைத்து செல்போனில் பேசக்கூடாது என்று என சொல்ல சொன்னேன். உதவி டைரக்டர் சொன்ன பிறகும் அவர்செல்போனில் பேசி கொண்டிருந்தார்.நவ்யா நாயர் சம்பந்தப்பட்ட காட்சியை நான் டைரக்டு செய்து கொண்டு இருந்த போது அவர் செல்போனில்மீண்டும் பேசினார். போனிலேயே யாருக்கோ முத்தம் கொடுத்தார். இதனால் அனைவரின் கவனமும் அந்தபெண் பக்கம் சென்றது. சூட்டிங்கிற்கு இடைஞ்சலாக இருந்தது.இதனால் எனக்கு கோபம் வந்தது. ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுத்து படப்பிடிப்பு நடத்துகிறோம். ஒவ்வொருநிடமிடமும் எங்களுக்கு முக்கியம். இப்படி இடையில் தெந்தரவு கொடுத்ததால் கோபம் வந்து அந்த பெண் யார்,அவரை உடனே வெளியே அனுப்புங்கள் என்று சத்தம் போட்டேன்.பிறகு மானேஜர் வந்து அந்த பெண்ணை வெளியே அழைத்து சென்றார். இது தான் நடந்தது. அனால் ஒரு துணைநடிகையை அடிக்கும் அளவுக்கு நானோ, நவ்யா நாயரோ தரம் தாழ்ந்து போய்விடவில்லை.தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை பற்றி தெரியும் ஒரு பெண்னை அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்றார் சேரன் படபடவென.இந்த விஷயத்தில் அடிபடும் முக்கிய நபரான நவ்யா நாயர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய்விட்டதால்அவரது தரப்பின் கருத்தை அறிய முடியவில்லை. துணை நடிகையை தாக்கிய நவ்யா-சேரன்

Subscribe to Oneindia Tamil

துணை நடிகை செல்போனில் பேசியாதல் அவரை கண்டித்து செட்டை விட்டு வெளியே அனுப்பினேன்.அவ்வளவு தான் நடந்தது. அவரை அடிக்கவில்லை என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

மாயக்கண்ணாடி படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்து, படத்தை இயக்குகிறார். அவருக்கு ஜோடியாக நவ்யாநாயர் நடிக்கிறார். இவருவருக்கும் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பியூட்டிபார்லாரில் நடந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தபோது ப்ரியா என்ற துணை நடிகை செல்போனில்பேசியதால் அவரை சேரனும், நவ்யா நாயரும் அடித்தாகக் கூறப்படுகிறது.

இது பற்றி சேரன் கூறுகையில்,

ஒரு நாளைக்கு ரூ. 75,000 பணம் கட்டி படப்பிடிப்பை நடத்திக் கொண்டு இருக்கிறோம். படப்பிடிப்பின் போதுயாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது என சுய கட்டுப்பாடு வைத்திருக்கிறோம்.

ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்த ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போதும் நாங்கள் யாரும்செல்போன்களை பயன்படுத்தியது இல்லை. அதே போல் மாயக்கண்ணாடி படப்பிடிப்பின் போதும் யாரும்செல்போனை பயன்படுத்து கூடாது என்று கேட்டுக்கொண்டேன். எல்லோருமே அதற்கு சம்மதம் அளித்துசெல்போனில் பேசுவதில்லை.

துணை நடிகை ப்ரியா என்று குறிப்பிடப்படுபவர் துணை நடிகையே அல்ல. பியூட்டி பார்லர் சம்பந்தப்பட்ட காட்சிஎன்பதால் ஆடம்பரமான தோற்றம் உள்ள பெண் தேவைப்பட்டார். அவர் வெளியே எங்கோ வேலை செய்பவர்.வீட்டுக்கு தெரியாமல் பாக்கெட் மணிக்காக நடிக்க வந்து இருக்கிறார்.

அவர் படப்பிடிப்பின்போது அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். உடனே நான் உதவி டைரக்டரைஅழைத்து செல்போனில் பேசக்கூடாது என்று என சொல்ல சொன்னேன். உதவி டைரக்டர் சொன்ன பிறகும் அவர்செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

நவ்யா நாயர் சம்பந்தப்பட்ட காட்சியை நான் டைரக்டு செய்து கொண்டு இருந்த போது அவர் செல்போனில்மீண்டும் பேசினார். போனிலேயே யாருக்கோ முத்தம் கொடுத்தார். இதனால் அனைவரின் கவனமும் அந்தபெண் பக்கம் சென்றது. சூட்டிங்கிற்கு இடைஞ்சலாக இருந்தது.

இதனால் எனக்கு கோபம் வந்தது. ஒரு நாளைக்கு ரூ.75,000 கொடுத்து படப்பிடிப்பு நடத்துகிறோம். ஒவ்வொருநிடமிடமும் எங்களுக்கு முக்கியம். இப்படி இடையில் தெந்தரவு கொடுத்ததால் கோபம் வந்து அந்த பெண் யார்,அவரை உடனே வெளியே அனுப்புங்கள் என்று சத்தம் போட்டேன்.

பிறகு மானேஜர் வந்து அந்த பெண்ணை வெளியே அழைத்து சென்றார். இது தான் நடந்தது. அனால் ஒரு துணைநடிகையை அடிக்கும் அளவுக்கு நானோ, நவ்யா நாயரோ தரம் தாழ்ந்து போய்விடவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கு என்னை பற்றி தெரியும் ஒரு பெண்னை அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லைஎன்றார் சேரன் படபடவென.

இந்த விஷயத்தில் அடிபடும் முக்கிய நபரான நவ்யா நாயர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய்விட்டதால்அவரது தரப்பின் கருத்தை அறிய முடியவில்லை.

துணை நடிகையை தாக்கிய நவ்யா-சேரன்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil