பச்சைக்கிளி படத்தில் இந்த பிரபல நடிகர் நடிக்க வேண்டியதா?.. ஹீரோ மாற ஜோதிகா கல்யாணம் தான் காரணமா?

சென்னை: பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமார், ஜோதிகா மற்றும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான அந்த படத்தை இயக்குநர் கெளதம் மேனன் இயக்கினார். சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில், பச்சைக்கிளி முத்துசரம் படம் ஓடாமல் போக காரணமே ஹீரோ மாறியது தான் என்பது போல அவர் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இடம்பெற்ற "உனக்குள் நானே உருகும் இரவில்" முதல் அத்தனை பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதுவரை தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த கெளதம் மேனனுக்கு மிகப்பெரிய சறுக்கலையும் அந்த படம் ஏற்படுத்தியது.

Cheran is the first choice for Pachaikili Muthucharam but due to Jyothika Marriage hero changed
Photo Credit:

சரத்குமாருக்கு பதிலாக இன்னொரு ஹீரோவைத்தான் அவர் அந்த படத்துக்காக தேர்வு செய்திருந்தாராம். ஆனால், ஜோதிகாவின் திருமணம் காரணமாக கடைசியில் சரத்குமார் அந்த படத்தில் இணைந்தார் என கெளதம் மேனன் கூறியுள்ளார்.

பக்காவான படம் பச்சைக்கிளி முத்துச்சரம்: மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கெளதம் மேனனன், சூர்யா நடிப்பில் காக்க காக்க படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றிப் பெற்றார். கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கிய வேட்டையாடு விளையாடு படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. ஆனால், அடுத்ததாக அவர் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் படம் அவருக்கு பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், படத்தின் கதையும் இயக்கமும் பாடல்களும் பக்காவாக இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அந்த படம் வெளியாகி இருந்தால் செமையா ஓடியிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சேரன் தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது: இயக்குநர் சேரனை தான் ஹீரோவாக நடிக்க வைக்க கெளதம் மேனன் திட்டமிட்டு இருந்தாராம். சாதாரண குடும்பஸ்தன் கதாபாத்திரத்துக்கு சேரன் கச்சிதமாக பொருந்துவார் என்பது தான் கெளதம் மேனன் கணிப்பு. ஆனால், இன்னொரு படத்தில் பிசியாக இருந்த சேரன், ஒரு 4 மாதங்கள் பொறுத்துக் கொள்ள முடியுமா? எனக் கேட்ட நிலையில், தான் அவருக்கு பதிலாக சரத்குமாரை வைத்து இந்த படத்தை இயக்கியதாக கெளதம் மேனன் கூறியுள்ளார்.

Cheran is the first choice for Pachaikili Muthucharam but due to Jyothika Marriage hero changed
Photo Credit:

ஜோதிகா கல்யாணம் தான் காரணம்: சேரனுக்காக கெளதம் மேனன் காத்திருக்க முடியாமல் அவசர அவசரமாக அந்த படத்தை இயக்க முக்கிய காரணமே சூர்யா - ஜோதிகா திருமணம் தானாம். 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜோதிகா திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சேரனுக்காக காத்திருக்க முடியாமல் இந்த படத்தை கெளதம் மேனன் இயக்கியிருக்கிறார்.

சரத்குமார் நடிப்பு சூப்பர்: சேரன் நடிக்கவில்லை என்றாலும், சரத்குமார் சாதாரண குடும்பஸ்த்தனாக கெளதம் மேனன் இயக்கத்தில் சிறப்பாகவே நடித்திருப்பார். மேலும், ஆண்ட்ரியாவுடன் கெமிஸ்ட்ரி எல்லாம் அவருக்கு வேறலெவலில் வொர்க்கவுட் ஆகியிருக்கும். சரத்குமார் படத்தில் இணைந்த நிலையில், இதனை ஆக்‌ஷன் படமாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தது தான் இந்த படம் அப்போது பெரிதாக வொர்க்கவுட் ஆகாமல் போனதற்கு காரணம் என்கின்றனர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் இணைந்து வாரணம் ஆயிரம் படத்தை பண்ண கெளதம் மேனன் அடுத்ததாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இயக்கினார். ஆனால், அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நடிகராக கலக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X