»   »  மக்களுக்கு கிடைத்த விருது - சேரன் மகிழ்ச்சி ஆட்டோகிராப் படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது மக்களுக்குக் கிடைத்த விருது என்றுஇயக்குனர் சேரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 52வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (புதன்கிழமை) டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்டோகிராப் படத்திற்கு 3விருதுகள் கிடைத்துள்ளன. மேலும், டான்ஸர் படத்தில் ஒற்றைக் காலுடன் நடித்து அனைவரையும் கவர்ந்த குட்டிக்கும் விருதுகிடைத்துள்ளது. நடன இயக்குனருக்கான விருதை பிரபு தேவா இந்திப் படத்திற்காகப் பெற்றுள்ளார். இதுதவிர தெலுங்குப் படத்திற்காக சிறந்தஇசையமைப்பாளர் விருதை வித்யாசாகர் முதல் முறையாகப் பெற்றுள்ளார். ஆட்டோகிராபுக்கு கிடைத்த விருதுகள் குறித்து சேரன் கூறுகையில், விருதை நான் ஏற்கனவே எதிர்பார்த்தேன். அதன்படியேகிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷம். இதற்கு முக்கியக் காரணம் மக்கள் தான். அவர்கள் கொடுத்த ஆதரவு தான் இன்று விருது வாங்கும் அளவுக்கு நாங்கள் வந்துள்ளோம். சிறந்த இயக்குனருக்கான விருதைநான் எதிர்பார்த்தேன். அது கிடைத்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். இருப்பினும் கிடைக்கவில்லை. பரவாயில்லை, அடுத்த படத்தில் நிச்சயம் அதை சரி செய்து விடுவேன். கவிஞர் பா.விஜய், பாடகி சித்ரா ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்சேரன். சித்ரா கூறுகையில், இது எனக்கு 6வது தேசிய விருது. ரொம்ப சந்தோஷம். ஒவ்வொரு பூக்களுமே பாடல் மிகுந்த அர்த்தங்கள்கொண்டது. தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பாடல். அந்தப் பாடலைப் பதிவு செய்தபோதே அது நிச்சயம் பேசப்படும் எனஎதிர்பார்த்தேன். இப்போது விருதையும் வாங்கிக் கொடுத்துள்ளது. இந்தப் பாடலை எழுதிய பா.விஜய், இசையமைப்பாளர் பரத்வாஜ்,இயக்குனர் சேரன், இப்பாடலில் நடித்த நடிகை சினேகா ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்சித்ரா. முதல் முறையாக தேசிய விருது பெறும் பா.விஜய் கூறுகையில், சென்னைக்கு வந்து 8 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்எனது பெற்றோரின் லட்சியமான தேசிய விருது எனக்குக் கிடைத்துள்ளது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை எழுதிய போதே எனக்குத் தெரிந்தது, இது நிச்சயம் விருது வரை செல்லும் என்று. எனதுநம்பிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் சேரனும், இசையமைப்பாலர் பரத்வாஜும் பேசினார்கள். இப்போது அது விருதுபெற்றிருக்கிறது. இது எனது பெற்றோரின் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளது. நானும், எனது மனைவியும் மிகுந்தமகிழ்ச்சியடைந்துள்ளோம். என்னைப் பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாக்யராஜ், இயக்குனர் சேரன்,இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் விஜய். டான்ஸர் நாயகன் குட்டியும் விருது பெற்ற சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். நடுவர்களின் சிறப்பு விருது குட்டிக்குக்கிடைத்துள்ளது. விருது குறித்து குட்டி கூறுகையில், என்னைப் போன்ற ஊனமுற்ற அத்தனை பேருக்கும் இந்த விருதை நான்சமர்ப்பிக்கிறேன். இதை மிகப் பெரிய பொக்கிஷமாக நினைக்கிறேன். ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் இது உத்வேகத்தையும்,தன்னம்பிக்கையையும் தரும். இந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்த இயக்குனர் கேயாருக்கு எனது நன்றிகள் என்றார்குட்டி.

மக்களுக்கு கிடைத்த விருது - சேரன் மகிழ்ச்சி ஆட்டோகிராப் படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது மக்களுக்குக் கிடைத்த விருது என்றுஇயக்குனர் சேரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 52வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (புதன்கிழமை) டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்டோகிராப் படத்திற்கு 3விருதுகள் கிடைத்துள்ளன. மேலும், டான்ஸர் படத்தில் ஒற்றைக் காலுடன் நடித்து அனைவரையும் கவர்ந்த குட்டிக்கும் விருதுகிடைத்துள்ளது. நடன இயக்குனருக்கான விருதை பிரபு தேவா இந்திப் படத்திற்காகப் பெற்றுள்ளார். இதுதவிர தெலுங்குப் படத்திற்காக சிறந்தஇசையமைப்பாளர் விருதை வித்யாசாகர் முதல் முறையாகப் பெற்றுள்ளார். ஆட்டோகிராபுக்கு கிடைத்த விருதுகள் குறித்து சேரன் கூறுகையில், விருதை நான் ஏற்கனவே எதிர்பார்த்தேன். அதன்படியேகிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷம். இதற்கு முக்கியக் காரணம் மக்கள் தான். அவர்கள் கொடுத்த ஆதரவு தான் இன்று விருது வாங்கும் அளவுக்கு நாங்கள் வந்துள்ளோம். சிறந்த இயக்குனருக்கான விருதைநான் எதிர்பார்த்தேன். அது கிடைத்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். இருப்பினும் கிடைக்கவில்லை. பரவாயில்லை, அடுத்த படத்தில் நிச்சயம் அதை சரி செய்து விடுவேன். கவிஞர் பா.விஜய், பாடகி சித்ரா ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்சேரன். சித்ரா கூறுகையில், இது எனக்கு 6வது தேசிய விருது. ரொம்ப சந்தோஷம். ஒவ்வொரு பூக்களுமே பாடல் மிகுந்த அர்த்தங்கள்கொண்டது. தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பாடல். அந்தப் பாடலைப் பதிவு செய்தபோதே அது நிச்சயம் பேசப்படும் எனஎதிர்பார்த்தேன். இப்போது விருதையும் வாங்கிக் கொடுத்துள்ளது. இந்தப் பாடலை எழுதிய பா.விஜய், இசையமைப்பாளர் பரத்வாஜ்,இயக்குனர் சேரன், இப்பாடலில் நடித்த நடிகை சினேகா ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்சித்ரா. முதல் முறையாக தேசிய விருது பெறும் பா.விஜய் கூறுகையில், சென்னைக்கு வந்து 8 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்எனது பெற்றோரின் லட்சியமான தேசிய விருது எனக்குக் கிடைத்துள்ளது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை எழுதிய போதே எனக்குத் தெரிந்தது, இது நிச்சயம் விருது வரை செல்லும் என்று. எனதுநம்பிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் சேரனும், இசையமைப்பாலர் பரத்வாஜும் பேசினார்கள். இப்போது அது விருதுபெற்றிருக்கிறது. இது எனது பெற்றோரின் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளது. நானும், எனது மனைவியும் மிகுந்தமகிழ்ச்சியடைந்துள்ளோம். என்னைப் பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாக்யராஜ், இயக்குனர் சேரன்,இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் விஜய். டான்ஸர் நாயகன் குட்டியும் விருது பெற்ற சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். நடுவர்களின் சிறப்பு விருது குட்டிக்குக்கிடைத்துள்ளது. விருது குறித்து குட்டி கூறுகையில், என்னைப் போன்ற ஊனமுற்ற அத்தனை பேருக்கும் இந்த விருதை நான்சமர்ப்பிக்கிறேன். இதை மிகப் பெரிய பொக்கிஷமாக நினைக்கிறேன். ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் இது உத்வேகத்தையும்,தன்னம்பிக்கையையும் தரும். இந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்த இயக்குனர் கேயாருக்கு எனது நன்றிகள் என்றார்குட்டி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆட்டோகிராப் படத்திற்கு 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது மக்களுக்குக் கிடைத்த விருது என்றுஇயக்குனர் சேரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

52வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (புதன்கிழமை) டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்டோகிராப் படத்திற்கு 3விருதுகள் கிடைத்துள்ளன. மேலும், டான்ஸர் படத்தில் ஒற்றைக் காலுடன் நடித்து அனைவரையும் கவர்ந்த குட்டிக்கும் விருதுகிடைத்துள்ளது.

நடன இயக்குனருக்கான விருதை பிரபு தேவா இந்திப் படத்திற்காகப் பெற்றுள்ளார். இதுதவிர தெலுங்குப் படத்திற்காக சிறந்தஇசையமைப்பாளர் விருதை வித்யாசாகர் முதல் முறையாகப் பெற்றுள்ளார்.

ஆட்டோகிராபுக்கு கிடைத்த விருதுகள் குறித்து சேரன் கூறுகையில், விருதை நான் ஏற்கனவே எதிர்பார்த்தேன். அதன்படியேகிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷம். இதற்கு முக்கியக் காரணம் மக்கள் தான்.

அவர்கள் கொடுத்த ஆதரவு தான் இன்று விருது வாங்கும் அளவுக்கு நாங்கள் வந்துள்ளோம். சிறந்த இயக்குனருக்கான விருதைநான் எதிர்பார்த்தேன். அது கிடைத்திருந்தால் இன்னும் முழுமையாக இருந்திருக்கும். இருப்பினும் கிடைக்கவில்லை.


பரவாயில்லை, அடுத்த படத்தில் நிச்சயம் அதை சரி செய்து விடுவேன்.

கவிஞர் பா.விஜய், பாடகி சித்ரா ஆகியோருக்கும் விருதுகள் கிடைத்துள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்சேரன்.

சித்ரா கூறுகையில், இது எனக்கு 6வது தேசிய விருது. ரொம்ப சந்தோஷம். ஒவ்வொரு பூக்களுமே பாடல் மிகுந்த அர்த்தங்கள்கொண்டது. தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் பாடல். அந்தப் பாடலைப் பதிவு செய்தபோதே அது நிச்சயம் பேசப்படும் எனஎதிர்பார்த்தேன்.

இப்போது விருதையும் வாங்கிக் கொடுத்துள்ளது. இந்தப் பாடலை எழுதிய பா.விஜய், இசையமைப்பாளர் பரத்வாஜ்,இயக்குனர் சேரன், இப்பாடலில் நடித்த நடிகை சினேகா ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்றார்சித்ரா.

முதல் முறையாக தேசிய விருது பெறும் பா.விஜய் கூறுகையில், சென்னைக்கு வந்து 8 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில்எனது பெற்றோரின் லட்சியமான தேசிய விருது எனக்குக் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு பூக்களுமே பாடலை எழுதிய போதே எனக்குத் தெரிந்தது, இது நிச்சயம் விருது வரை செல்லும் என்று. எனதுநம்பிக்கைக்கு ஆதரவு தெரிவித்து இயக்குனர் சேரனும், இசையமைப்பாலர் பரத்வாஜும் பேசினார்கள். இப்போது அது விருதுபெற்றிருக்கிறது.

இது எனது பெற்றோரின் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளது. நானும், எனது மனைவியும் மிகுந்தமகிழ்ச்சியடைந்துள்ளோம். என்னைப் பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாக்யராஜ், இயக்குனர் சேரன்,இசையமைப்பாளர் பரத்வாஜ் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார் விஜய்.

டான்ஸர் நாயகன் குட்டியும் விருது பெற்ற சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். நடுவர்களின் சிறப்பு விருது குட்டிக்குக்கிடைத்துள்ளது. விருது குறித்து குட்டி கூறுகையில், என்னைப் போன்ற ஊனமுற்ற அத்தனை பேருக்கும் இந்த விருதை நான்சமர்ப்பிக்கிறேன்.

இதை மிகப் பெரிய பொக்கிஷமாக நினைக்கிறேன். ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் இது உத்வேகத்தையும்,தன்னம்பிக்கையையும் தரும். இந்த விருது கிடைக்கக் காரணமாக இருந்த இயக்குனர் கேயாருக்கு எனது நன்றிகள் என்றார்குட்டி.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil