அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்… திடீர் திருமணத்தின் உண்மை பின்னணி!

சென்னை: அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் குறித்து செய்யாறு பாலு பேட்டி அளித்துள்ளார்.

அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் செப்டம்பர் 13ந் தேதி,அருண்பாண்டியனின் பண்ணை வீட்டில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Cheyyar Balu shared interesting information about Ashok Selvan and Keerthi Pandian wedding

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன்: அதையடுத்து, அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில்,நடிகர் சூர்யா, கார்த்தி சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

கிசுகிசுவில் சிக்காமல்: இந்நிலையில், சினிமா விமர்சகரான செய்யாறு பாலு இவர்களின் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதில், இவர்கள் இருவரின் திருமணம் குறித்த செய்தி வந்ததும் ஆச்சரியமாக இருந்தது. இருவரும் அங்க சுத்துறாங்க, இங்க சுத்துறாங்க என்று எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காமல் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

Cheyyar Balu shared interesting information about Ashok Selvan and Keerthi Pandian wedding

எளிமையான முறையில்: அருண்பாண்டியனுக்கு சினிமா மற்றும் அரசியல் செல்வாக்கு இருப்பதால், இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அருண்பாண்டியனின் சொந்த ஊரில் மிகவும் எளிமையான முறையில் பண்ணை வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் நல்ல ஜோடி.

பல கோடி சொத்து: அருண்பாண்டியன் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே, அவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. திருநெல்வேலி அருண்பாண்டியனின் பூர்வீக ஊராக இருந்தாலும் அவர் படித்தது வளர்ந்தது எல்லாமே இந்தியாவில் உள்ள பல முக்கிய ஊர்களில் தான். திருநெல்வேலியில் செட்டில் ஆன பிறகுதான் அவர் சினிமாவில் நடிக்கவே வந்தார். தற்போது அவரிடம் 200 கோடிக்கு மேல் சொத்துக்கு சொந்தக்காரர். தென்மாவட்டத்தில் மிகுந்த செல்வாக்கு உள்ள மனிதர்.

Cheyyar Balu shared interesting information about Ashok Selvan and Keerthi Pandian wedding

உருவகேலி: இப்படி ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்த கீர்த்திபாண்யன், தும்பா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். அவர் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தபோது பல விமர்சனங்கள், உருவகேலிகளை எதிர்கொண்டார். இப்படிப்பட்ட ஒருவர் நிச்சயம் உயரத்தை தொட முடியும்.

நல்ல ஜோடி பொருத்தம்: அதே போல அசோக் செல்வனும் சினிமா பின்புலம் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின. ஆனால், ஓ மை கடவுளே திரைப்படம் இவருக்கு சினிமாவில் நல்ல ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அண்மையில் வெளியான போர்த்தொழில் திரைப்படமும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.

அப்படி வளர்ந்து வரும் நடிகரை அருண்பாண்டியன் மருமகனாக ஏற்றுக்கொள்கிறார் என்றால், அது நிச்சயம் பாராட்டக்கூடியது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனுக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று செய்யாறு பாலு இவர்களின் திருமணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X