Ajith kumar: ஒரே இரவில் காலியான அஜித்தின் இமேஜ்.. செய்யாறு பாலு சொன்ன தகவல்!

சென்னை: நடிகர் அஜித் 'Campa' விளம்பரத்தில் நடித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கடவுளே அஜித்தே என அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய ரசிகர்களே அவரை விமர்சித்து வருகிறார்கள். சமூக வலைதளத்தில் பெருகும் மோசமான விமர்சனங்களுக்கு நடிகர் அஜித் பதில் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கும் இந்த பிரச்சனை குறித்து செய்யாறு பாலு தனது வீடியோவில் பேசி இருக்கிறார். அதில், அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக இணையத்தில் அஜித், விஜய் இருவரை பற்றியும் எதுவுமே பேச முடியாது. அப்படி ஏதாவது பேசினால் இரண்டு தரப்பு ரசிகர்களும் மல்லு கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனால், இன்று அஜித் ரசிகர்களே அவரை சகட்டுமேனிக்கு திட்டி வருகிறார்கள்.

Ajith Kumar Campa Cheyyaru Balu

செய்யாறு பாலு: துணிவு படம் வெளியான போது அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா நல்ல ஒரு படத்திற்கு விளம்பரம் தேவையில்லை, அந்த படமே தனது விளம்பரத்தை தேடிக் கொள்ளும் என அஜித் கூறியதாக தனது ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். இது எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என தெரியவில்லை. வாரிசு, துணிவு இரண்டு படங்களும் வெளியான போது ரெண்டு ரசிகர்களுக்கு இடையே கடுமையான இணையத்தில் வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது வாரிசு படத்தில் விஜய், இசைவெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். உடனே அஜித்தின் ரசிகர்களும் துணிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அஜித் வருவார் என்றும், அப்போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார் என்றும் பலவிதமான செய்திகள் வெளியானது . ஆனால், துணிவு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை.

ரசிகர்கள் வேண்டாம்: அவர் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏன் கலந்து கொள்ளவில்லை என பல விதமான கேள்விகள் வந்தன. அப்போதும், அஜித்தின் ரசிகர்கள், அவர் தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருக்கிறார். ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என அஜித் சொன்னபின் தானே அவர் அந்த படத்தில் நடித்தார் என பலவிதமான ஆதரவு குரல்கள் வந்தன. ஆனால், இப்போது அஜித் 'Campa' விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. இதற்கு சிலர் ஆதரவு தெரிவிக்கும் வகையில், அஜித் தனது ரேசிங் கம்பேனியை பிரபலப்படுத்த வேண்டும், அதற்கு நிதி தேவைப்படுகிறது என்பதால் விளம்பரத்தில் நடித்ததாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அஜித் இப்படி செய்யலாமா: அஜித், ஒரு கார் ரேசராக மட்டும் இருந்திருந்தால் பரவாயில்லை நடிகராக வந்து இன்று உச்ச நடிகராக மாறி இருக்கிறார். பல இடங்களில் அஜித் கார் ரேசிங்கிற்கு செல்லும் போது அவரது ரசிகர்கள் தல என கொண்டாடும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் நடிகராக இருந்தது தான். நடிகராக அவருக்கு கிடைத்த பெயர், பணம், புகழ் வேண்டும். ஆனால், ரசிகர்களை நேரடியாக சந்திக்க மாட்டேன், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள எடுக்க மாட்டேன் என தனக்கென ஒரு கொள்கையை வைத்திருந்த அஜித் அவர்கள் தற்போது தன்னுடைய ரேசிங் கம்பேனிக்காக ஈசியாக ஒரு எனர்ஜி டிரிங்க் விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். இதனால் ஒரே நாளில் அவரின் இமேஜ் காலியாகிவிட்டது. அவரை கொண்டாடிய ரசிகர்கள் அனைவரும் அவரை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X