நயன்தாரா,கார்த்தி ,சிம்பு என்று படு பிசியான ரித்து...அடுத்த கட்ட பிளான்ஸ் ஒரு ஸ்பெஷல் பேட்டி

சென்னை: நடிகை நயன்தாரா படப்பிடிப்பின்போது தன்னுடன் விளையாடியதாக சிறுவன் ரித்து தெரிவித்தார்.

Recommended Video

ரித்விக் Cute Speech | Rithu Rockz | Nayanthara | O2 Press Meet *Kollywood | Filmibeat

மேலும் அவர் கூறுகையில், ஜூன் 22ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்களையும், சமீபத்தில் திருமணம் செய்து நடிகை நயன்தாராவுக்கு திருமண வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ரித்து ராக்ஸ் யூட்யூப் சேனல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிகவும் பிரபலம் . அதிலும் குறிப்பாக ரித்து ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு கெட்டப்பு போட்டு கொண்டு வருவது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது

யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி, தற்போது நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள O2 திரைப்படத்தில் நடித்துள்ள ரித்து நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

நயன்தாரா விளையாடின கேம்

நயன்தாரா விளையாடின கேம்

கேள்வி: தற்போது நீங்கள் நடித்த O2 படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: என்னுடைய முதல் திரைப்படம் O2. வரும் ஜூன் 17ம் தேதி வெளிவருகிறது. எனது யூடியூப் சேனலுக்கு அளித்த ஆதரவு போன்று இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் . நான் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லித் தந்தார். கேமராமேன் தமிழ் அண்ணா நன்றாக என்னிடம் அன்பாக பேசினார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய நயன்தாரா மேடத்துடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். நயன்தாரா மேடம் என்னுடன் படப்பிடிப்பின் போது Rock, Paper, Scissor என்ற விளையாட்டை டைம் கிடைக்கும் போதெல்லம் விளையாடினார் .

ஜெய்ண்ட் வீல் போல இருந்தது

ஜெய்ண்ட் வீல் போல இருந்தது

கேள்வி: உங்களுக்கு பிடித்த வசனம் எது?

பதில்: பஸ்சிற்குள் நான் போகும் முதல் சீனும், நான் அப்பொழுதும் பேசும் வசனமும் ரொம்ப பிடிக்கும். பிலிம்சிட்டியில் உருவாக்கப்பட்ட அந்த பஸ்சில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது ஜெய்ண்ட் வீலீல் செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது என்றார். படம் ரீலீஸ் ஆகும் வரை வசனங்களை சொல்ல கூடாது என்று சிரித்தபடி அருகில் இருந்த அம்மாவின் முகத்தை பார்த்து கொண்டே வசனத்தை சொல்லாமல் சமாளித்தார் ரித்து .

நீண்ட நாள் ஆசை

நீண்ட நாள் ஆசை

கேள்வி: நீங்கள் யாருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: "ஜூன் 22ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என்று மிகவும் கியூட்டாக தனது ஸ்டைலில் ரித்து கூறினார் , விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து ஆக வேண்டும் என்பது ரித்துவின் நீண்ட நாள் ஆசை என்பது பல பேட்டிகளில் தொடர்ந்து பேசி வருகிறார் . அது மட்டும் அல்லாமல் நயன்தாரா ஆன்ட்டி, விக்னேஷ் சிவன் அங்கிள் இருவருக்கும் ஹாப்பி வெட்டிங் டே என்று புன்னகையுடன் குட்டி குழந்தை அன்பை கொட்டி கொடுத்து பேசினான் .

பள்ளிக்கு செல்வதில்லை

பள்ளிக்கு செல்வதில்லை

கேள்வி: உங்களுக்கு பிடித்த டீச்சர் யார்?

பதில்: நான் அவணி பப்ளிக் ஸ்கூலில் படிக்கிறேன். எனக்கு சயின்ஸ் டீச்சர் சோனா மேடத்தை பிடிக்கும்.

எனது நண்பன் ஜோஸ்வாவை பிடிக்கும். நான் யூடிப்பில் போடும் வீடியோக்களை, எனது நண்பன் ஜோஸ்வா , பள்ளி ஆசிரியர்களும் பாராட்டுவார்கள் என்றார் ரித்து . மேலும் பள்ளிக்கு, இப்போதைக்கு தேர்வுக்கு மட்டும் செல்வதாகவும், வகுப்புகளை ஆன்லைனில் கவனிப்பதாகவும் தெரிவித்தார். கார்ட்டூன் கேரக்டர் Shinchan மற்றும் சூப்பர் ஹீரோசையையும் பிடிக்கும். மேலும் ரிமோட் கார் விளையாடுவது ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றார்.

எப்போது சிரமம்

எப்போது சிரமம்

கேள்வி: யூடியூப் சேனலில் நீங்கள் போடும் வீடியோக்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது?

பதில்: யூடியூப் சேனலில் போடும் வீடியோக்கள் எனது தந்தை ஜோதிராஜ் மற்றும் அஷா அவர்களின் துணையுடன் செய்து வருகிறேன். மேலும் என்னை பொறுத்தவரை வீடியோக்களில், பெண் கேரக்டரை விட ஆண் கேரக்டர் தான் ரொம்ப பிடிக்கும். யூடியூப் சேனலில் வீடியோ போடுவதும், படங்களில் நடிப்பதையும் இரண்டையும் செய்வேன். எதையும் விடமாட்டேன் . மேலும் யூடியூப் வீடியோக்களில், நான் நடித்த கதாபாத்திரங்களில் ரோபோ கெட் அப்பில் நடிக்கும்பொழுது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று தெரிவித்தார்.

மாஸான சீன்

மாஸான சீன்

கேள்வி: உங்களுக்கு மிகவும் பிடித்த படம் மற்றும் பாடல் எது?

பதில்: எனக்கு நடிகர் விஜய் நடித்த மாஸ்ட்ர் படம் ரொம்ப பிடிக்கும். அதே போல் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பாடல்கள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அழகாக ஒரு பாடலை பாடி காட்டினார் ரித்து . அதன் பிறகு சமீபத்தில் வெளியான நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தை பார்த்ததாகவும், பெரிய துப்பாக்கியை வைத்து சுடுவது மாஸான சீன் என்றும் தெரிவித்தார் குட்டி ரித்து . நான் நடிகர் கார்த்தி அங்கிள் கூட நடித்து வருகிறேன் என்றும் சிம்பு அங்கிள் கூட நடிக்க பேச்சு வார்த்தை நடந்து இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/MAXKZT35klE இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், சிறுவன் ரித்து இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X