மன்னிப்புக் கேட்கிறேன்.. 100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷலை தூக்கிச் சாப்பிடுவாரு.. பாடகி தீ குறித்து சின்மயி!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தில் இடம்பெற்றுள்ள 'முத்த மழை' பாடலை தமிழில் பாடகி தீ (Dhee) பாடியுள்ளார். ஆனால், சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடகி தீ அந்த பாடலை பாடாமல் சின்மயி மேடையேறி பாடியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மேலும், அவரது குரலில் அந்த பாடல் சிறப்பாக உள்ளது என்றும் அவரது வெர்ஷனையே தமிழில் வெளியாகும் தக் லைஃப் படத்தில் இணைக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து தங்களது வாட்ஸப் ஸ்டேட்டஸில் தொடங்கி சோஷியல் மீடியா முழுவதும் சின்மயியை கொண்டாடி வருகின்றனர்.

Chinmayi praises singer Dhee and explainst what exactly happend at Thug Life audio launch

இந்நிலையில், பாடகி தீ மற்றும் தன்னை மல்யுத்த போட்டியில் ஈடுபடுத்துவது போல சண்டை போட வைக்க வேண்டாம் என்றும் இன்னும் 15 ஆண்டுகளில் பாடகி தீ, 100 சின்மயி மற்றும் 100 ஸ்ரேயா கோஷலை தாண்டி செல்வார் என்றும் சின்மயி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பெருந்தன்மையோடு பேசியுள்ளார்.

முந்திய முத்த மழை: கமல்ஹாசன் படங்களில் முத்தக் காட்சிகள் என்றாலே நொடிப் பொழுதில் பிரபலமாகி விடும். இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் அதை நன்கு உணர்ந்து "முத்த மழை இங்கு கொட்டித் தீராத" என்கிற பாடலையே தக் லைஃப் படத்துக்குப் போட்டிருக்கிறார். மேலும், தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய வெர்ஷனை 'சரிகம தமிழ்' யூடியூப் சேனலில் ஆடியோ கம்பெனி வெளியிட்ட நிலையில், அந்த பாடல் இதுவரை 5 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. ஸ்ருதிஹாசன் பாடிய விண்வெளி நாயகா, த்ரிஷா நடனமாடிய சுகர் பேபி பாடல்களை எல்லாம் பீட் செய்து முத்த மழை பாடல் ரசிகர்களின் புதிய ரிங்டோனாகவும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாகவும் மாறிவிட்டது.

பாடகி தீயிடம் மன்னிப்பு கேட்கிறேன்: முத்த மழை பாடலை தான் ஸ்டேஜ் ஏறி பாடக் காரணமே, பாடகி தீ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியது தான் காரணம். இந்தி மற்றும் தெலுங்கில் சின்மயி தான் இந்த பாடலை பாடியுள்ளார். திடீரென முத்த மழை பாடல் வீடியோ டிரெண்டான நிலையில், அதன் காரணமாக பாடகி தீ வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என சோஷியல் மீடியாவில் எங்கள் இருவருக்கும் தேவையற்ற மல்யுத்தத்தை உருவாக்கியுள்ளனர். இப்படியொரு கம்பேரிசன் வர காரணமாக நான் அமைந்த நிலையில், அதற்காக பாடகி தீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என சின்மயி கூறியுள்ளார்.

100 சின்மயி, 100 ஸ்ரேயா கோஷல்: பாடகி தீயின் வாய்ஸ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் சின்னப் பொண்ணு இன்னும் 15 ஆண்டுகளில் அவர் 100 சின்மயி மற்றும் 100 ஸ்ரேயா கோஷலை கடந்து மிகப்பெரிய சாதனையை படைக்கக் கூடிய அளவுக்கு சென்றுவிடும் திறமை உள்ளது. நான் ஆடியோ வெளியீட்டு விழாவில் எனக்கு கொடுக்கப்பட்ட கடமையை மட்டுமே செய்தேன். அதனால், தேவையற்ற சர்ச்சைகளையும் மனக் கசப்புகளையும் உருவாக்கும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம் என பாடகி சின்மயி கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X