நினைவு திரும்பாமல் கோமாவில் இருந்தேன்.. பெத்த குழந்தையே யாருன்னு தெரியல.. நடிகை கண்ணீர் பேட்டி!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்திரம் பேசுதடி, தங்கமயில் மற்றும் கலர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்த ஜமீலா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கரோலின். அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்த கரோலினுக்கு திடீரென உடல் நலன் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி, கோமாவிற்கு சென்று, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

சாவின் விளிம்பு வரைக்கும் சென்று மீண்டு வந்த நடிகை கரோலின் tele Vikatan
youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு திருமணமாகி குழந்தை பிறந்த ஐந்தாவது மாதத்தில் திடீரென எனக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இரவு சாப்பிட்டு விட்டு குழந்தையை கவனித்துக் கொண்டு இருந்தேன். அப்போது வலிப்பு ஏற்பட்டு வாயில் நுழைத்தள்ளி மயங்கி விழுந்துவிட்டேன். இதைத்தொடர்ந்து, என்னை என் குடும்பத்தினர்கள் மீட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்தனர். வலிப்பு வந்ததால் இதயம் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது, 25 சதவீதம் தான் வேலை செய்கிறது என்று சொன்னார்கள்.

Caroline zeetv interview
Photo Credit:

கோமாவில் இருந்தேன்: அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து மூளையில் வலிப்பு வந்து கொண்டே இருந்ததால், கோமா நிலைக்கு சென்றுவிட்டேன். கோமாவிலேயே கிட்டத்தட்ட 16 நாட்கள் இருந்தேன். அந்த நேரத்தில் என்ன நடந்தது, யார் உடன் இருந்தார்கள் என எனக்கு எதுவுமே தெரியவில்லை. ஐசியூவில் வென்டிலேட்டருடன் சிகிச்சை கொடுப்பதற்கு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவானது. இதனால், கையில் இருந்த நகை, பணம் என அனைத்தையும் விற்றுத்தான் என்னை காப்பாற்றி இருக்கிறார்கள். என் ஐந்து மாத குழந்தையை வைத்துக்கொண்டு என் அம்மா படாதபாடு பட்டு இருக்கிறார். அவர்கள் டைலர் வேலை பார்த்துத்தான் எங்கள் அனைவரையும் வளர்த்தார்கள். எனக்கு குழந்தை பிறந்த பிறகு, இனிமேல் நீங்கள் வேவைக்கு போகவேண்டாம், வீட்டில் இருந்து குழந்தையை கவனித்துக் கொண்டு இருங்கள் என்று சொன்னேன். ஆனால், கடைசியில் எனக்கு இப்படி ஆகும் என்று நான் கனவில் கூட நினைக்கவே இல்லை.

எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது: கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஐசியூவில் இருந்தேன். அதன் பிறகு தான் வீட்டிற்கு வந்தேன். வீட்டிலேயும் படுத்த படுக்கையாக தான் இருந்தேன். என்னுடைய சிகிச்சைக்கு மட்டும் 32 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் என்ன நடந்தது, ஏது நடந்தது என்று எனக்கு தெரியாது. கோவமாவில் இருந்து நினைவு திரும்பியதும் ஆறு வருடத்தில் என் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எனக்கு மறந்துவிட்டது. கணவன், குழந்தை, மாமனார், மாமியார் என அனைத்தையும் மறந்து விட்டேன். பெற்ற குழந்தையை எனக்கு யார் என்று தெரியவில்லை. பின் போட்டோவை காட்டித்தான் எனக்கு திருமணமானதும், குழந்தை பிறந்ததும் தெரிந்தது. இப்படி ஒரு நிலைமை எதிரிக்கும் கூட வரக்கூடாது.

கண்கலங்கிய நடிகை: இப்பொழுதுதான் என்னுடைய உடல்நிலை சரியாகி உள்ளது. மீண்டும் சீரியலில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடிக் கொண்டு இருக்கிறேன். என்னுடைய குடும்பம் அனுபவித்த கஷ்டங்களிலிருந்து, அவர்களுக்கு ஓரளவாவது நிம்மதி கொடுக்க வேண்டும் கடன்களிலிருந்து அவர்களை மீட்க வேண்டும். என் அம்மா, தம்பி, கணவர் மட்டும் இல்லை என்றால், என்னால் மீண்டு வந்து இருக்கவே முடியாது என்று நடிகை கரோலின் கண்கலங்கி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X