»   »  வெளுக்கணும் - கிறிஸ்டினா

வெளுக்கணும் - கிறிஸ்டினா

Subscribe to Oneindia Tamil

கிளாமரிலும் பின்னி எடுக்கணும், கிராமத்துப் பொண்ணாகவும் அசரடிக்கனும், இப்படி விதம் விதமான ரோல்களில் விளையாட வேண்டும் என்பதுதான் எனது ஆசை என்கிறார் சென்னை 600028 நாயகி கிறிஸ்டினா ஜபக்.

பார்த்தவுடன் லபக் என்று மனசுக்குள் உட்கார்ந்து கொண்டு விடுகிறார் ஜபக். அவ்வளவு அழகாகவும், அம்சமாகவும் இருக்கிறார். நல்ல உடல் வாகு என்பதால் கிளாமருக்கு படு பொருத்தமானவர் என்பது ஜபக் குறித்த கோலிவுட்டின் கணிப்பு.

குறிப்பாக சென்னை 600028ல் ஜபக், ஜபர்தஸ்தாக கிளாமர் காட்டி கிறங்க வைத்த என்னமோ பண்ணுது பாடல் ரசிகர்களைக கிறங்கடித்தது. இப்படியே கிளாமரில் தொடர்ந்து கலக்கும் எண்ணம் உள்ளதா என்று கிறிஸ்டினாவிடம் கேட்டோம்.

அதற்கு கிறிஸ்டினா, மும்பையில் மாடலிங், ஆல்பம் என ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்த என்னை சென்னை 600028 பட யூனிட் கதையைக் கூறியபோது, அந்தக் கதை என்னை வெகுவாக கவர்ந்தது. உடனே ஓகே சொல்லி விட்டேன்.

இது எனது முதல் படம் என்பதால் ஆரம்பத்தில் பயமாக இருந்தது. ஆனால், படத்தில் நடித்தவர்கள் இளைஞர் என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டே எப்போதும் கலகலப்பாக இருக்கும். அதில் எனது பயம் ஓடி விட்டது

படத்தில் நான் கிளாமராக நடித்துள்ளேன். அதை பலரும் கேட்டனர். ஆனால் அதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அந்தப் பாடலில் கிளாமர் தேவைப்பட்டது. அதனால்தான் செய்தேன். மற்றபடி வலியக்கத் திணிக்கப்பட்ட கிளாமர் அல்ல அது.

எனக்கு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க ஆசையாக உள்ளது. கிளாமரிலும் கலக்க வேண்டும், கிராமத்துப் பெண்ணாகவும் அசத்த வேண்டும், நவநாகரீக பெண்ணாகவும் நடிக்க வேண்டும். இப்படி விதம் விதமான கேரக்டர்களில் வெளுத்து வாங்க ஆசையாக உள்ளது என்றார் ஜபக்.

ஜபக் ஒரு முடிவெடுத்து விட்டார்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil