சுந்தர் சிக்கு இருந்த அழுத்தம்.. போன் ஸ்விட்ச்ஃஆப்.. ரஜினி,கமலுக்கே தெரியாது.. அப்படி என்ன பிரச்சனை?
சென்னை: ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும், அப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அப்படத்தை வருகிற 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்து இருந்தனர். அப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்த நிலையில், சுந்தர் சி இப்படத்தில் இருந்து விலகி உள்ளார். இதுகுறித்து Media Circle யூடியூப் சேனலுக்கு வெங்கடேஷ் பேட்டி அளித்துள்ளார்.
அதில், சுந்தர் சி அவர்கள் ரஜினிகாந்துக்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார். அதை வாய்ப்பு வரும் போது ரஜினியிடம் சொல்லலாம் என காத்திருந்தார். அந்த நேரத்தில் தான் ரஜினியிடம் இருந்து அழைப்பு வர, சுந்தர் சி அந்த கதையை ரஜினிக்கு சொல்லி இருக்கிறார். கதை ரஜினிக்கு பிடித்து விட்டதால் ஓகே சொல்லிவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை கமலஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என அறிவித்துவிட்டார். இது கமலுக்கே மிகப்பெரிய அதிர்ச்சி தான். இந்த இடத்தில் தான் சுந்தர் சிக்கு சின்ன நெருடல் ஏற்பட்டுள்ளது. தனக்கு தூணாக இத்தனை ஆண்டுகளாக பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர்களை ரஜினியின் படத்தை தயாரிக்க வைக்க வேண்டும் என்பது சுந்தர் சியின் எண்ணம். ஆனால், ரஜினிக்கு, தன்னுடைய நண்பன் கமலஹாசனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அவரது தயாரிப்பில் நடிப்பதாக அறிவித்தார்.

சுந்தர் சி: அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை ஜனவரி மாதமே வெளியிட வேண்டும் என ரஜினி அழுத்தம் கொடுத்திருக்கிறார். தற்போது சுந்தர் சி அவர்கள் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிஜி வேலையில் இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் விஷாலை வைத்து ஒரு படத்தை எடுப்பதற்கான ஐடியாவில் இருக்கிறார். இந்த நேரத்தில் தான் ரஜினி கதையை கேட்டு விட்டு உடனே ஓகே சொல்லிவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை ஜனவரி மாதமே வெளியிட வேண்டும் என ரஜினி சொல்லி இருக்கிறார். சுந்தர் சியிடம் ஒன் லைன் கதை மட்டும்தான் இருக்கிறது. மொத்த கதையும் அவர் தயார் செய்வதற்கு, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். ஆனால், ரஜினி படத்தை உடனே முடிக்க வேண்டும் என சொல்லி இருப்பதால், சுந்தர் சிக்கி அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது.
ஃபோன் ஸ்விட்ஆப்: ரஜினியின் படத்தில் கமிட்டாகி விட்டால், மூக்குத்திஅம்மன் 2 மற்றும் விஷாலுடன் கமிட்டாகி இருக்கும் படம் என இரண்டு படங்களுமே பாதிக்கும். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தான் இன்ஸ்டாகிராமில் சுந்தர் சி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இப்படி ஒரு முடிவை சுந்தர் சி எடுத்திருப்பது, கமல், ரஜினி இருவருக்குமே தெரியாது. மத்தளத்திற்கு நான்கு பக்கம் அடி என்பது போல, சுந்தர் சிக்கு நான்கு பக்கமும் அழுத்தம் இருத்ததால், இந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. மேலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத படி சிந்தர் சி ஃபோனையும் ஆப் செய்து வைத்து இருக்கிறார். தற்போது கமல் வெளியூரில் இருப்பதால், அவர் வந்த பிறகு தான் ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பார்கள் என்று வெங்கடேஷ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











