நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அனுப்பினேன்.. உத்தமன் வேஷம் போடல.. மனசாட்சி உறுத்துது.. பிரபலம்!
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வதும், நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அழைப்பதும், இலை மறைவு காய் மறைவாக இருந்தது. அதைபற்றி அப்போது வெளியில் சொல்வதற்கு பல நடிகைகள் தயக்கம் காட்டினார்கள். ஆனால், இப்போது இருக்கும் நடிகைகள் வெளிப்படையாக அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசி பலரின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். மூத்த சினிமா பத்திரிக்கையாளும், பிஆர்ஓவுமான வித்தகன் சேகர் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து Frontvoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நடிகைக்கு பட வாய்ப்பை வாங்கி தரக்கூடிய இடத்தில் இருக்கும் அனைவருமே அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடியவங்க தான். ஆனால், எந்தவிதமான அட்ஜெஸ்ட்மெண்டும் கேட்காத கண்ணியமான ஆண்களும் இந்த துறையில் இருக்கிறார்கள். என்னிடம் ஒரு நடிகை பட வாய்ப்பு வந்தால் போதும், அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ரெடி என்று சொன்னார். நானும் ஒரு இயக்குநரிடம் அவரை அனுப்பி வைத்தேன். இதுவும் பிஆர்ஓ வேலை தான். ஆனால், நான் எந்த நடிகையிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் கெட்டது இல்லை. நான் உத்தமன் வேஷம் போட விரும்பவில்லை, அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒகே சொன்ன நடிகைகளை, அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கும் இயக்குநர்களுக்கு அனுப்பி இருக்கிறேன். அப்படி நடித்த நடிகையின் படம் கடந்த ஆண்டு வெளியானது.
மனசாட்சி உறுத்துது: இப்போது நான் எந்த நடிகை அட்ஜெஸ்ட்மெண்டுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டேன். ஏன் என்றால், இப்படி நடிகைகள் எந்தவிதமான திறமையும் இல்லாமல் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பை பெறுவதால், திறமையான நடிகைகளுக்கு படவாய்ப்பு வருவதில்லை. அதே போல அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து நடிக்க போன நடிகை, சரியாக நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் என்னிடம் வருத்தப்பட்டார். இதனால், என் மனசாட்சி உறுத்தியதால் அந்த வேலையை சமீபகாலமாக செய்வதில்லை. ஆனால், இப்போதும், பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒகே சார் வாய்ப்பு வாங்கி கொடுங்க என்று என்னிடம் கேட்கும் போது, அவர்களிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், சினிமாவில் நீடித்து இருக்க முடியாது. திறமை இருந்தால், நிச்சயம் நல்ல வாய்ப்பு தேடி வரும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிகிறேன் என்று வித்தகன் சேகர் அந்த பேட்டியில் வெளிப்படையாக பல விஷயத்தை பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











