twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் அழிந்து வரும் சினிமா தியேட்டர்கள்.. திரைக் களஞ்சியம் ஸ்ரீதர் பேட்டி!

    |

    சென்னை: சினிமா பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஆர்வம் வெகு சிலருக்கு மட்டுமே உள்ளது.

    பழங்கால திரைப்படங்களை சேகரித்து வைத்தல், எந்த ஆண்டு எந்த சினிமா வெளியானது என்கிற விவரங்களின் விக்கி பீடியாவாக சில மனிதர்கள் நம்மோடு இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

    Cinema Theaters rapidly disappears in Chennai city – Sridhar interview!

    ரீவைண்ட் ராஜாவின் புதிய வீடியோ பேட்டியில் சென்னையில் இருந்த பழம்பெரும் திரையரங்குகள் குறித்த வரலாற்றை விரல் நுனியில் வைத்திருக்கும் திரைக் களஞ்சியம் ஸ்ரீதர் பேட்டி வெளியாகி உள்ளது.

    கேசினோ திரையரங்கத்திற்கும் முன்னதாக 1913ம் ஆண்டு கட்டப்பட்ட மினர்வா திரையரங்கம் வரை ஏகப்பட்ட தகவல்களை இந்த பேட்டியில் அடுக்கி உள்ளார்.

    சினிமா விரும்பிகளுக்கு பல தகவல்களை ஒவ்வொரு வார்த்தையிலும் உதிர்த்து வருகிறார் ஸ்ரீதர்.

    வங்கியில் வேலை பார்த்துக் கொண்டே சென்னையில் இருந்த பிரபல திரையரங்கள் காலத்தின் மாற்றத்தால் எப்படி காணாமல் போயின என்பது குறித்து முழுமையாகவும் விரிவாகவும் இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

    முதல் எலக்ட்ரிக்கல் தியேட்டர், அப்போதே எஸ்கலேட்டர் வைக்கப்பட்ட தியேட்டர் என இவர் சினிமா திரையரங்குகள் குறித்து பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

    ஒடிடி தளங்களின் வரவு காரணமாக மீண்டும் சினிமா திரையரங்குகள் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.

    பெரிய திரையில் அடுத்த தலைமுறையினர் சினிமாவை காண வேண்டும் என்றால், தியேட்டர்களை சினிமாவை சேர்ந்தவர்களும் சினிமா ரசிகர்களும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

    English summary
    Cinema lover Sridhar talks about old and ethnic Cinema theaters in Chennai area which were disappears slowly due to various reasons in Rewind Raja show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X