முதல்வர் ஸ்டாலின் கால் பண்ணி வாழ்த்தினார்.. எழுத்தாளர் அசோக் பேட்டி

சென்னை: சமூக ரீதியான கருத்துக்களை மக்களியடையே கொண்டு சேர்பவர் எழுத்தாளர் அசோக்.

பன்முகம் கொண்ட சிந்தனையாளராகவும் அசோக் விளங்கி வருகிறார். அசோக் திராவிட முன்னேற்ற கழகத்தின் தீவிர தொண்டன் ஆவார்.

எழுத்தாளர் அசோக் ஃபில்மி பீட் தமிழுக்கு பலதரப்பட்ட விஷயங்களை பேட்டியளித்துள்ளார்.

வசன எழுத்தாளர்

வசன எழுத்தாளர்

ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் வெளிவந்த களத்தில் சந்திப்போம் படத்தில் வசன எழுத்தாளராக இருந்தவர் அசோக். ராஜசேகர் இயக்கும் அடுத்த படத்திலும் வசனம் எழுதுகிறார் அசோக். இது மட்டுமின்றி கிருத்திகா உதயநிதி இயக்கும் வெப் சீரியஸிலும் வசனம் எழுத உள்ளார் அசோக்.

எழுதும் திறன்

எழுதும் திறன்

புத்தக வாசிப்பு குறித்து பேசிய அசோக், இந்த பழக்கம் தந்தை சொல்லி கொடுத்து சிறு வயதில் இருந்து வந்தது என கூறியுள்ளார். 2ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து புத்தகம் படிப்பதாகவும், தேர்வு வரும் போதும் பாட புத்தகங்களை படிக்காமல் மற்ற புத்தகங்களை படித்ததை நினைவு கூர்ந்தார். எழுதும் திறன் அம்மாவின் ஊக்கவித்ததால் வளர்ந்ததாக பேட்டியளித்துள்ளார்.

ஸ்டாலின் பாராட்டு

ஸ்டாலின் பாராட்டு

அசோக்கின் குடும்பம் திராவிட முன்னேற்ற கழகத்தினை பின்பற்றும் குடும்பமாகும். தி.மு.க விற்கு எதிராக பொய்யான கருத்துக்கள் பரவும் போது அதனை எதிர்த்து சமூக வலைதளத்தில் பதிவுகளை தொடர்ந்து பதிவிடுபவர் அசோக். அசோக் எழுதிய கட்டுரைகளை படித்து தளபதி ஸ்டாலின் அவர்கள் இரண்டு முறை அழைத்து பாரட்டியதையும் குறிப்பிட்டுள்ளார்.

சரியான அரசியல்

சரியான அரசியல்

அதேபோல் தன்னுடைய புத்தகத்தை படித்து விட்டு உதயநிதி ஸ்டாலின் தன்னை பாராட்டியதாகவும் கூறியுள்ளார். தன்னுடைய தொழில் அரசியல் அல்ல ஆனால் அரசியல் மீது ஆர்வம் உள்ளது எனவும் இளைஞர்கள் மத்தியில் சரியான அரசியலை கொண்டு சேர்ப்பதே தன்னுடைய எண்ணம் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X