Vijay: விஜய் சிஎம் ஆனது நிறைய பேருக்கு ஷாக்கிங்கா இருக்கும்.. இயக்குநர் மிஷ்கின் ஓபன் டாக்!
சென்னை: எம்ஜிஆரை மக்கள் எப்படி தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் முழுக்க முழுக்க அன்பால் தான் ஒரு தலைவன் உருவாகியிருக்கிறார். இது நிறைய பேருக்கு ஷாக்கிங்கா இருக்கும். ஆனால், எனக்கெல்லாம் ஷாக் இல்லை என இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதலமைச்சர் விஜய் குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
யூத் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய போதுதான் முதன் முதலில் விஜய்யை பார்த்தேன். அதன் பிறகு லியோ படத்தில் ஒரு வாரம் வேலை பார்த்த போது மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படியே பார்த்து கட்டி பிடிச்சி முத்தம் கொடுத்துடுச்சி, இப்படியொரு மனிதன் பழசையெல்லாம் மறக்காமல் இப்படி ஒரு உயரத்துக்கு வந்த பிறகும் இருப்பாரா? என்றால் அது ஆச்சர்யம் தான்.

விஜய் ஒன்றும் ஜஸ்ட் லக் மூலமாக முதலமைச்சர் ஆகிவிடவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் சினிமாவில் எந்தளவுக்கு உழைத்தார்களோ அதே அளவுக்கு அரசியலிலும் உழைத்து தான் தங்களுக்கான இடத்தை பிடித்தனர். அதே போலத்தான் கடுமையான உழைப்பாளி விஜய் என மிஷ்கின் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
நிறைய பேருக்கு ஷாக்கிங்கா இருக்கும்: விஜய் முதலமைச்சர் ஆனதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் ஷாக் ஆகி உள்ளனர். ஒரு சிலர் தங்களை தாங்களே எக்ஸ்போஸ் செய்து வருகின்றனர். முதலமைச்சர் விஜய் அமைச்சர்களாக நியமித்தவர்களுக்கு என்ன தகுதி இருக்கு என விஷால் போன்ற நடிகர்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளனர். அருண் விஜய், சாந்தனு உள்ளிட்டோர் அதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று பிரஸ் மீட் வைத்து விஜய் சிஎம் ஆனது எனக்கு பொறாமை கிடையாது. ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் தான். எம்ஜிஆர், என்டிஆர் போல விஜய் சாதித்துள்ளார் என பாராட்டியுள்ளார். இந்நிலையில், இந்த பேட்டியில் விஜய் சிஎம் ஆனது நிறைய பேருக்கு ஷாக்கிங்காத்தான் இருக்கும் என மிஷ்கின் ஓபனாகவே போட்டு உடைத்துள்ளார்.
24/7 உழைக்கும் ஹீரோ: விஜய் இனிமேல் கட் சொன்னதும் அமைதியாக இருக்கும் போகும் நடிகர் அல்ல, அவர் 24/7 ஹீரோவாகத்தான் மக்களுக்காக உழைக்கப் போகிறார். தமிழ்நாட்டு மக்கள் இத்தனை ஆண்டுகளாக அவருக்கு கொடுத்த லவ்வை பதிலுக்கு அவர் திருப்பிக் கொடுக்கவே அரசியலுக்கு வந்துள்ளார். விஜய்க்கு அது தெரியாது, இது தெரியாது, எப்படி ஆட்சி செய்வார் என்று பேசுவது எல்லாம் ரொம்ப தப்பு. அவர் சூப்பரா எல்லாத்தையும் திட்டமிட்டு பண்ணப்போகிறார் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம் எனக் கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் உடன் படம்: மிஷ்கின் அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் உடன் சத்யவான் சாவித்ரி படத்தில் நடித்து வருகிறார். கோர்ட் ரூம் டிராமாவாக இந்த படம் உருவாகி வருகிறது. சாண்டி மாஸ்டருடன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் முதலமைச்சர் ஆனது ரொம்பவே சந்தோஷம் என பேட்டியளித்துள்ளார். இயக்குநர் மிஷ்கினின் பேட்டியை விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications