வெளிநாடு போய் எடுக்க வேண்டிய ஷூட்.. கடைசியா கோவால எடுத்தோம்.. உயிரே சீரியல் நடிகர் அம்ருத் பேட்டி!
சென்னை: கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் உயிரே சீரியல் நடிகர் அம்ருத் கொடுத்துள்ள சிறப்பு பேட்டி வெளியாகி உள்ளது.
முன்னதாக இந்த சீரியல் தொடர்பாக நடியையும் உயிரே சீரியல் தயாரிப்பாளருமான நிரோஷா அளித்த பேட்டிகள் வைரலாகின.
சமீபத்தில், பல திருப்புமுனைகள் நிறைந்த எபிசோடுக்காக இந்த சீரியல் குழு கோவா சென்று வந்த அனுபவங்களை நடிகர் அம்ருத் நம்முடன் கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

செழியன் எனும் கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து வரும் அம்ருத்தை சுற்றி ஏகப்பட்ட பெண்கள் சண்டையிட்டு வருவது ஏன்? என்கிற கேள்விக்கு, கதைப்படி தான் ஒரு அரசியல்வாதி, ஆனால், நாட்டுப் பிரச்சனையை விட வீட்டுப் பிரச்சனை அதிகம் என்பதை காட்டுவதற்காகவே வீட்டில் நடக்கும் பல பிரச்சனைகளை இயக்குநர் அழகாக படமாக்கி வருகிறார் என்றார்.
கோவா ஷூட்டிங் பற்றி பேசும்போது, அந்த சீனை வெளிநாட்டில் தான் எடுக்க பிளான் பண்ணியிருந்தோம். கொரோனா லாக்டவுன் காரணமாக வெளிநாட்டில் ஷூட்டிங் செல்ல முடியாத நிலையில், பக்கத்தில் உள்ள கோவாவுக்கு போய் ஷூட் செய்துட்டு வந்தோம்.
ஏகப்பட்ட திருப்புமுனை காட்சிகள் கோவாவில் படமாக்கினோம், வரும் நாட்களில் அதை டிவியில் கண்டு ரசியுங்கள் என்றார்.
மேலும், மிகப்பெரிய வருத்தமாக கோவாவுக்கு போனோம், கோவான்னு எழுதுன போர்ட மட்டும் தான் முழுசா பார்த்தேன். மத்தபடி முழுக்க முழுக்க வொர்க் லோடு தான், ஜாலியா சுத்தி பார்க்க முடியல பாஸ் என சிரித்துக் கொண்டே உயிரே சீரியல் பற்றி பேசிய அம்ருத்தின் முழு பேட்டியை வீடியோவில் கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











