கால் விரல்கள் போச்சு... பிச்சை எடுக்குற நிலையில இருக்கேன்.. பாவா லட்சுமணன் கண்ணீர் பேட்டி!
சென்னை: "மாயி அண்ணா வந்திருக்காக, மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்காக.. வா மாமா மின்னல்!" என்ற வசனத்தைக் கேட்டதுமே நம் முகத்தில் புன்னகை தானாக வந்துவிடும். 'மாயி' படத்தில் வடிவேலுவுடன் இவர் அடித்த லூட்டிகள் இன்று வரை மீம்ஸ் மெட்டீரியலாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இப்படி 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த பாவா லட்சுமணன், தற்போது ஒரு விபத்து காரணமாக காலில் 3 விரல்களை இழந்து, வறுமையின் விளிம்பில் நின்று கதறி அழுதுள்ள பேட்டி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பறிபோன 3 விரல்கள்: அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு உருக்கமான பேட்டி அளித்துள்ள பாவா லட்சுமணன், நான் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருஷமா இருக்கேன். ஆரம்பத்துல புரொடக்ஷன் மேனேஜரா வேலை பார்த்தேன், அப்புறம் தான் நடிகனா மாறினேன். 'மாயி' படம் எனக்குப் பெரிய அடையாளம் தந்தது. ஆனா சமீபகாலமா எனக்கு சினிமாவுல வாய்ப்பே இல்லை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கர்நாடகாவுல ஒரு தேர்தல் பிரச்சாரத்துக்குப் போயிருந்தப்போ, எதிர்பாராத விதமா அங்கிருந்த ஜெனரேட்டர் மேல கால் வச்சுட்டேன். அப்போ எனக்கு வலி எதுவும் தெரியல. ஆனா, 10 நாள் கழிச்சு கால் பயங்கரமா வீங்கிடுச்சு. ஆஸ்பத்திரியில காட்டியப்போ , இன்பெக்ஷன் ஆகி உடனே ஆபரேஷன் பண்ணி 3 விரல்களையும் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. வேற வழி இல்லாம விரல்களை எடுத்துட்டேன்.

முதல்வர் உதவ வேண்டும்: விரல்களை எடுத்த பிறகு பாவா லட்சுமணனால் இனி நடக்கவே முடியாது என்று சினிமா வட்டாரத்தில் பரவிய தவறான தகவல் பரவியதால் படவாய்ப்பு வரவே இல்லை. இப்போ நான் பிச்சை எடுக்குற நிலைமையில தான் இருக்கேன். இந்த வீட்டையும் காலி பண்ண சொல்லிட்டாங்க, என நண்பர் தான் இப்போதைக்குத் தங்குறதுக்கு ஒரு வீடு பார்த்து கொடுப்பதாக சொல்லி இருக்கிறார். இந்த இக்கட்டான சூழல்ல விஜய் டிவி பாலா, நடிகர் ஜீவா, போன்றவர்கள் எனக்குத் தொடர்ந்து சாப்பாட்டுக்கும் மருத்துவச் செலவுக்கும் பண உதவி செஞ்சுட்டு இருக்காங்க. எனக்கு இப்போ முதலமைச்சர் விஜய் அவர்கள் எனக்கு ஏதாச்சும் உதவி செய்தா நல்லா இருக்கும். அவரை நேர்ல போய்ப் பார்க்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டேன், ஆனா என்னால அவரைப் பார்க்க முடியல. இருப்பதற்கு ஒரு வீடு கூட இல்லாமல் கஷ்டப்படுறேன். எனக்கு ஒரு வீடு கிடைச்சா, என் கடைசி காலத்தை நிம்மதியா கழிப்பேன் என்று கண்ணீர் மல்கக் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications