இளம் நடிகர்கள் திறமையானவர்கள்.. எப்படியும் நடிப்பார்கள்.. சார்லி புகழாரம்
சென்னை : நடிகர் சார்லி அவர்கள் சிறந்த குணசித்திர நடிகர் , அவர் ஆரம்ப காலத்தில் நல்ல நகைச்சுவை திறன் மிகுந்த காமெடியனாக நடித்து வந்தாலும் தற்போது நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நல்ல குணசித்திர நடிகராக மாறியிருக்கிறார். தற்போது பிழை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் சார்லி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்து பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார் .
சார்லி கடந்த பத்து வருடங்களில் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் குணசித்தர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் முக்கியமான படங்கள் என்றால் ஜீவா ,கிருமி, ஒரு நாள் கூத்து , மாநகரம் , காதல் கசக்குதையா, மெய் மற்றும் தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் சிறந்த குணசித்திர நடிகராய் நடித்து இருப்பார் .

சார்லி ஏன் இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கும் தேவை என்கிற கேள்விக்கு பதிலளித்த சார்லி ,மாநகரம் படத்தில் அனைவரும் புதுமுகங்களாக இருப்பார்கள் ஆனால் சார்லி மட்டும் பழைய முகம் ஏனெனில் சார்லி ஒவ்வொரு முறை நடிக்கும் போது தன்னை புதுமுகமாக மாற்றி நடித்து கொள்வார் என்ற சிறப்பு சார்லிக்கு இருக்கிறது என்று தன்னை பற்றி கூறினார் .
மேலும் இன்றைய தலைமுறைகளுக்கு நான் எந்த அறிவுரைகளையும் வழங்குவதில்லை ஏனெனில் இன்றைய தலைமுறையினர் மிக திறமை மிக்கவர்களாக இருக்கிறார்கள் முக்கியமாக தான் பணியாற்றிய பிழை படத்தில் நடித்த அனைத்து சிறுவர்களும் மிக திறமை மிக்கவர்கள் அவர்களிடம் நான் அதீத விசயங்களை கற்று கொண்டேன் என சார்லி கூறினார் .

சார்லி தான் தற்போது நடித்துள்ள பிழை படம் பற்றியும் பேசியுள்ளார், இன்றைய தலைமுறை பிள்ளைகள் நம் பேச்சை கேட்க மாட்டார்கள் அதற்கென்று நாம் எதையும் திணிக்க கூடாது அவர்கள் திறமை என்பது நம்மை காட்டிலும் பெரியது. இந்த படத்தில் நான் ஒரு கல் உடைக்கும் தொழிலாளியாக நடித்துள்ளேன் மிகவும் கடுமையான கதாபாத்திரமாக இருந்தது என்று கூறினார்
இன்றைய நடிகர்கள் பேசும் அரசியல் எழுதில் மக்களை சென்று அடைகிறது முக்கியமாக விஜய் விவசாயம் பற்றி பேசுவது ரஜினி தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி பேசுவது என்று கூறினார். மேலும் இந்த தலைமுறையில் எனக்கு பிடித்த நடிகர்கள் அருண்விஜய் மற்றும் அருள்நிதி என்று கூறினார். இந்த இருவரும் எப்படிப்பட்ட விசயங்களையும் மிக அசத்தலாக நடிக்க கூடிய நடிகர்கள் என்றும் கூறினார் .


Click it and Unblock the Notifications











