இது உலக பிரச்சனை.. கணவன்களை வறுத்தெடுக்கும் மனைவிகள்.. கோதண்டம் ’கலகல’ காமெடி பேட்டி!
சென்னை: காமெடி நடிகர் கோதண்டம் அளித்துள்ள லாக்டவுன் பேட்டி நமது பிலிமி பீட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கவுண்டமணி - செந்தில் போல, இரட்டையர்களாக காமெடி செய்து கலக்கி வருகிறார்கள் விஜய் டிவி புகழ் முல்லை - கோதண்டம்.
முல்லை இல்லாமல், கோதண்டம் மட்டும் கொடுத்துள்ள இந்த பேட்டி முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார்.

ஒரு ரூபாய்க்கு இரண்டு என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் கோதண்டம், சென்னைக்கு அருகே திருநின்றவூரில் வசித்து வருகிறார்.
தான் செய்ததிலேயே, தனக்கு உலகளவில் பிரபலத்தை உண்டு செய்தது, மார்வாடி மனைவியாக விஜய் டிவியில் செய்த காமெடி தான் என மனம் திறந்துள்ளார்.
கணவன்மார்களை வறுத்தெடுக்கும் மனைவியாக நடித்த அந்த காமெடி தமிழகம் அளவில் எங்கு சென்றாலும், பலரும் அந்த காமெடியை சொல்ல சொல்லி கேட்டனர். ஓ தமிழகம் முழுவதும் மனைவிமார்கள் கணவன்களை வறுத்தெடுக்கிறார்கள் போல என நினைத்தேன். பின்னர், இந்தியா முழுவதும் டிராவல் பண்ணும் போதும், அதையே கேட்டனர். கடவுள் புண்ணியத்தில், உலகத்தில் சில நாடுகளில் பயணிக்கும் அனுபவம் கிடைக்கும் போது, மக்கள் குறிப்பாக அதையே கேட்கும் போது தான் தெரிந்து கொண்டே, இது உலக பிரச்சனை என்று சரவெடியாக பேசி சிரிக்க வைத்துள்ளார்.
டிக்டாக் தடை, மயில்சாமி தன்னை பாராட்டியது, குடிகாரனாக நடிக்க மாட்டேன் என முடிவு செய்தது என பல விசயங்களை இந்த வீடியோவில் பேசி உள்ளார்.
சமீபத்தில், இந்த லாக்டவுனில் பள்ளி கட்டணம் கட்டச் சொல்லி தொல்லைக் கொடுக்கும் பள்ளிகளை விளாசி அவர் போட்ட வீடியோ வேற லெவலில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











