மூளைய கொஞ்சம் தட்டி சரி பண்ணிட்டாங்க.. காமெடி நடிகர் லோகேஷின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
சென்னை: முடக்குவாதத்தால் முடங்கிப் போன நடிகர் லோகேஷ், மருத்துவமனை சிகிச்சை எல்லாம் முடிந்து மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
Recommended Video
அவருடைய புது வீட்டிற்கே சென்று, இப்போ அவருடைய லைஃப் எப்படி இருக்குன்னு பல சுவாரஸ்ய விஷயங்களை அலசி ஆராய்கிறது இந்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டி.

ஆதித்யா சேனலில் விஜேவாக இருந்து கலக்கி வந்த லோகேஷ், விஜய்சேதுபதியின் நானும் ரவுடி தான் படத்தில், "எனக்கு அவரை பார்த்தா தான் பயமா இருக்கு" என விஜய்சேதுபதி சொல்ல, ஆனந்த்ராஜ், அவர் அருகே அழைத்து செய்யும் காமெடி ரசிகர்களை எந்தளவுக்கு சிரிக்க வைத்ததோ, அதே போன்ற ஒரு நிலை, நிஜமாக உருவாகி, உயிருக்கு போராடும் நிலையில், இருந்தபோது, ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
வண்டி ஓட்ட முடியாத நிலை உள்ளதாகவும், இந்த லாக்டவுன் அனைவருக்கும் ரெஸ்ட் கொடுத்துள்ளது என்றும், மூளைய கொஞ்சம் தட்டி கரெக்ட் பண்ணிட்டாங்க, டாக்டர்கள் இப்போ கவுன்ட்டர்கள், முன்பை விட பக்காவா வருது என அவர் சொல்லும் போது, சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியாமல் உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் தன்னை வந்து சந்தித்தது குறித்தும், நடிகை சஞ்சனா சிங் வந்து சந்தித்தபோது, அவர் உபசரித்தது குறித்த வேடிக்கையான விஷயங்களும் இந்த ஜாலியான பேட்டியில் நிறைந்து இருக்கிறது.
எல்லாத்தையும் விட, காமெடி நடிகர் லோகேஷை பிறந்த மேனியில் காணும் அரிய வாய்ப்பும் உள்ளது, மிஸ் பண்ணாமல் வீடியோவை என்ஜாய் பண்ணுங்க.. இன்னொரு முக்கியமான விஷயம், இவங்கப்பா மியூசிக் போட நம்ம சிம்பு சின்ன வயசுல அப்படி டான்ஸ் ஆடுன அரிய தகவல்களையும் நமக்காக சொல்லிருக்காரு லோகேஷ், அதுவும் என்னன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க..
யாருன்னே தெரியாத பலரும், பல மதத்தினரும் தான் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர், அவர்கள் அனைவருக்கும் நன்றி என அதையும் மறக்காமல் இந்த பேட்டியில் நடிகர் லோகேஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











