ஏழெட்டு வருஷமா காமெடி நடிகனா இருந்த ரவிமரியா... வில்லனா மாறிய தருணம் ஸ்பெஷல் பேட்டி

சென்னை: சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோடும் திரைப்படம் ஜெயில். அழுத்தமான கதையும் ஆழமான கதாப்பாத்திரங்களும் கொண்ட இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் வசந்தபாலன்.

நடிகரும் எழுத்தாளரும் இயக்குனருமான ரவி மரியா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் பல மலையாள படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.

சிறந்த குணச்சித்திர நடிகரான ரவி மரியா ஆரம்பகாலத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் சில வருடங்களாக நகைச்சுவைக்கு வந்த வாய்ப்பு பற்றியும், தற்போது மீண்டும் சீரியஸ் வில்லனாக உருவெடுத்துள்ளதும் பற்றி நம்மிடையே பகிர்கிறார் ரவிமரியா

வில்லனா காமெடியனா?

வில்லனா காமெடியனா?

கேள்வி : ஜெயில் படத்துல இந்த கேரக்டர எப்படி உணர்ந்து நடிச்சீங்க?

பதில் : ஆரம்பத்துல நான் சீரியஸ் கேரக்டர்தான் பண்ணிகிட்டு இருந்தேன். நண்பர் இயக்குனர் வசந்தபாலன் என்னை வெயில் படத்துல அறிமுகப்படுத்தினாரு. அப்பறம் கோரிப்பாளயம்,மாயாண்டிகுடும்பத்தார், பழனி போன்ற படங்கள் எல்லாம் சீரியஸா போயிகிட்டு இருந்தப்ப, மனம் கொத்தி பறவை படத்துல இயக்குனர் எழில் என்ன காமெடி கலந்த வில்லனா ஒரு வாய்ப்பு குடுத்தாரு. அதுக்கப்பறம் அதுவே மக்களுக்கு பிடிச்சி போக, அதுவே தொடர்ந்துச்சு. ஆனா எனக்கு மறுபடியும் சீரியஸ் வில்லனா நடிக்கனுமேன்னு ஒரு ஆர்வம் இருந்துச்சு. ஜெயில் படம் இயக்குனர் போன் பண்ணி வில்லனா நடிக்கனும்ன்னு சொன்னாரு. எனக்கு பயங்கர பயம். ஏன்னா இந்த படம் அழுத்தமான பதிவு. இந்த கேரக்டர் ரொம்ப முக்கியமான கேரக்டர் அதனால் மிகப்பெரிய பயம் இருந்துச்சு .

செதுக்கிய வசந்தபாலன்

செதுக்கிய வசந்தபாலன்

கேள்வி : அப்போ உங்களுக்கு சந்தோஷமா இல்லயா?

பதில் : சந்தோஷத்த தாண்டி ஒரு பயம் இருந்துச்சு. ஏழெட்டு வருஷமா இப்ப ஆடியன்ஸ் பார்த்தாலே சிரிக்கிற மாதிரி நாம இருக்கோம். எப்படி ஏத்துக்குவாங்கன்னு இருந்துச்சு. ஆனா என் நண்பன் என்ன நம்பி இந்த பொறுப்ப குடுக்குறப்ப, ரொம்ப தெளிவா ஷாட் பை ஷாட் கவனமா இருந்தேன். நானும் சிரிக்கல.. சிரிக்கவும் விடல. அல்ரெடி வில்லனா இருந்ததால எனக்கு ஈசிதான். ஆனா சிரிப்புலருந்து வில்லனா ட்யூன் ஆக சிரமப்பட்டேன். இயக்குனர் வசந்தபாலன் ரொம்பவே என்ன செதுக்கினாரு. இப்படி வேணாம். இதெல்லாம் வேணும்ன்னு சொல்லி கொண்டு வந்தாரு.

எச்ச போலீஸ் தெரியுமா?

எச்ச போலீஸ் தெரியுமா?

கேள்வி : ஜெயில் படத்துல உங்க கதாப்பாத்திரம் பற்றி..

பதில் : இந்த படம் பார்த்துட்டு ஒரு ரைட்டர் சொன்ன ஒரு விஷயத்த அப்படியே நான் சொல்றேன். வழக்கமா தமிழ் சினிமாவில் கெட்ட போலீஸ் இருப்பாங்க, நல்ல போலீஸ் இருப்பாங்க. இதத்தான் தமிழ் சினிமா காட்டிருக்கு. ஆனா எச்ச போலீஸ்-ன்னு ஒரு விஷயத்த தமிழ் சினிமா காட்டுனதே இல்ல.. அத மிக சிறப்பா ரவிமரியா சிறப்பா பண்ணிருக்காருன்னு சொன்னாரு.

ரெண்டும் இருக்கு

ரெண்டும் இருக்கு

கேள்வி : போலீஸ்-ன்னாவே கெட்டவங்களா?

பதில் : இது ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சனைய சொல்லப்பட்டிருக்க படம். நல்லவங்க கெட்டவங்கன்னு ரெண்டு இருக்கு. இந்த கதைக்கு கெட்டவங்களா போலீச காட்ட வேண்டிய சூழல். அதனால போலீஸ் எல்லாருமே கெட்டவங்கன்னு சொல்ல முடியாது. என் குடும்பத்துலயும் போலீஸ் ல்லாம் இருக்காங்க. அதுக்காக போலீஸ் எல்லாரும் நல்லவங்கன்னும் சொல்ல முடியாது. போலீஸ் எல்லாரும் கெட்டவங்கன்னும் சொல்ல முடியாது. இரண்டும் இருக்கு.இந்த படத்துல இப்படி சொல்லப்பட்டிருக்கு அவ்வளவுதான்.

வேற கேரக்டர் குடுத்தா

வேற கேரக்டர் குடுத்தா

கேள்வி : எல்லாருக்கும் சொல்ல விரும்பும் விஷயம் ?

பதில் : இவர் இந்த கேரக்டர்தான் பண்ணுவாருன்னு முத்திரை குட்த்திடறாங்க. ஏன் நாகேஷ் வில்லனா நடிச்சதில்லயா.. மக்கள் ஏத்துக்கலயா? அது போல எல்லா நடிகர்களுக்குள்ளயும் திறமைகள் இருக்கு. எந்த கேரக்டர் குடுத்தாலும் அத சிறப்பா பண்ணக்கூடியவன் தான் உண்மையான கலைஞன். ஆனா இவங்களால இதான் முடியும், வேற கேரக்டர் குடுத்தா பண்ணமாட்டாருன்னு லாம் முத்திர குத்திடாதீங்கன்னு தான் எல்லார்ட்டயும் கேட்டுக்கிறேன். மக்கள் அத ரசிக்கிறாங்க. சிரிப்பா இருந்தா சிரிக்கிறாங்க. சீரியஸா இருந்தா முதல் சீன் லயே ட்யூன் ஆகிடறாங்க. ஆனால் நாம் தான் பயந்துகிட்டுருக்கோம் அந்த பயத்தை போக்கி, எல்லாரும் எல்லா கேரக்டரையும் பண்ண முடியுங்கிற சினிமாவை உருவாக்கனும்ன்னு நான் வேண்டிக்கிறேன் என்று மாற்றம் தரும் பதிலோடு சொல்லி முடித்தார் ரவிமரியா. இன்னும் பல விஷயங்களை மனதார பேசிய இந்த பேட்டியின் முழு வீடியோவை காண பில்மி பீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று பார்க்கலாம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X