முந்தானை முடிச்சுனா முருங்கைக்காய் ‘கிக்’னா இது…படக்குழுவினரின் கலகல பேட்டி!
சென்னை : பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கிக் படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி,கோவை சரளா, தம்பிராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படக்குழுவினர், எமது பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதைப்பார்க்கலாம்.
சந்தானத்தின் கிக்: அதில், கிக் படத்தில் மேஜிக் பிளாக் பஸ்டர் என்று ஒருவிஷயம் இருக்கிறது. முந்தானை முடிச்சு படத்திற்கு எப்படி முருங்கைக்காயோ, இது போல கிக் படத்திற்கு இந்த மேஜிக் பிளாக் பஸ்டர் சாக்லேட். இந்த சாக்லேட் படம் வெளியாகும் செப்டம்பர் 1ந் தேதி தியேட்டரில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐட்டம் பாடலுக்கு: இதையடுத்து பேசி செந்தில் இந்த படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலில் மட்டும் நடித்து இருக்கிறேன். இந்த படத்தில் நான் கட்டாயம் இருக்க வேண்டும் என்று இயக்குநர் விரும்பினார். சந்தானத்துடன் முதன்முறையாக இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்றார்.
1ந் தேதி ரிலீஸ்: பார்ச்சூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். கிக் திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த கலகலப்பான நேர்காணலின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.


Click it and Unblock the Notifications











