Vadivelu: 14 வருட சதி.. சுந்தர் சியும் நானும் பிரிய காரணம்.. வடிவேலு சொன்ன அந்த விஷயம்!

சென்னை: 12 வருடத்திற்கு பிறகு வெளியான மத கஜ ராஜா படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கேங்கர்ஸ்'. நீண்ட வருடங்களுக்கு பிறகு, இப்படத்தில் சுந்தர்.சி - வடிவேலு காமெடி கூட்டணி இணைந்திருக்கிறது. இப்படம் ஏப்ரல் 24-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், படம் குறித்து சுந்தர்.சியும் வடிவேலுவும் கூட்டாக பேட்டி அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பேசிய சுந்தர் சி அவர்கள், 14 வருடத்திற்கு பிறகு நானும் வடிவேலு அவர்களும் இந்த படத்தில் இணைந்திருக்கிறோம். ஆனால். 14 வருடத்திற்கு பின் இணைந்தது போலவே எங்களுக்கு தெரியவில்லை நகரம் படத்தில் நாங்கள் எப்படி சந்தித்தோமோ... அதேபோலத்தான் இப்போதும் வடிவேலு அவர்கள் எனர்ஜியுடனும் பரபரப்புடனும் இருக்கிறார். நானும் அடுத்தடுத்த படத்தை இயக்கிக்கொண்டே இருந்ததால், எங்களுக்குள் இத்தனை வருட இடைவெளி வந்ததே தெரியவில்லை. தற்போது விட்ட இடத்தில் இருந்தே பயணத்தை தொடங்கி இருக்கிறோம் என்றார்.

gangers Vadivelu Sundar C

14 வருட பிரச்சனை: மேலும், இதுகுறித்து பேசிய வடிவேலு, சுந்தர்சிக்கும் எனக்கும் ஒரு நூலிழை விரிசல் தான் . அதை வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் பெரிதாக்கி விட்டார்கள். கடைசியில் ஒரு மிகப்பெரிய பூகம்பமே வந்து, அந்த விரிசல் சரியாகி நானும் சுந்தரும் ஒன்று சேர்ந்து விட்டோம். என்னிடம் ரூபன் என்பவர் ஒரு கதையை கூறிவிட்டு இந்த கதையில் சுந்தர் சியை வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். நானும் ஓகே அப்படியே எடுத்துவிடலாம் என்றேன். உடனே அவர் சுந்தர் சியை சந்தித்து பேசினார். நீங்களும் வடிவேலும் இந்த கதையில் நடித்தால், நன்றாக இருக்கும் என்றார். அதன் பிறகு நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம்.

அதைத் தொடர்ந்து நீங்களும் நானும் ஒரு படத்தில் முதலில் நடித்து விடுவோம். அதன் பிறகு அந்த படத்தில் நடிக்கலாம் என்று சொன்னார். அத்துடன் எங்களுக்கு இடையில் இருந்த பிரச்சனையே மறந்து விட்டது அந்த பிரச்சனை என்ன என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. நம்மூரில் நான்கு பேர் சேர்ந்து இருந்தால் பலருக்கு பிடிப்பதில்லை. வில்லத்தனமாக சொல்லாத ஒன்றை இன்னொருவரிடம் சொல்லி பிளவை ஏற்படுத்துகின்றனர். இப்படி பல ஆண்டுகள் நாங்கள் இருவரும் பிரிந்து இருந்தோம். ஆனால், எங்களுக்கு 14வருடம் போனதே பெரிதாக தெரியவில்லை என்று அந்த பேட்டியில் வடிவேலு பேசி இருந்தார்.

gangers Vadivelu Sundar C

கேங்கர்ஸ்: ஏப்ரல் 24ந் தேதி வெளியாக இருக்கும் 'கேங்கர்ஸ்' திரைப்படத்தை குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா சி இசையமைத்துள்ளார். இதில் வடிவேலு, முனிஷ்காந்த், பகவதி பெருமாள், அருள்தாஸ், வெங்கட்ராகவன், கேதரின் தெரசா, ஹரீஷ் பெரடி ஆகியோர் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் வடிவேலு பலவிதமான கெட்டப்பில் சிரிக்க வைத்துள்ளார். சுந்தர்.சி மற்றும் வடிவேலுவின் கூட்டணியில் வின்னர், லண்டன், கிரி, ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் ஆகிய படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X