கை கால் விழுந்துடுச்சி.. மகள் சாப்பாட்டுகே கஷ்டப்படுறா.. கண்கலங்கி பேசிய வெங்கல் ராவ்!

சென்னை: நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்த நடிகர் வெங்கல் ராவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல நடிகர்கள் உதவி செய்துள்ள நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் வைகை புயல் வடிவேலு.அவருடன் இணைந்து தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் வெங்கல் ராவ், வடிவேலு ரீ-என்டரியான நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும் வெங்கல் ராவ் நடித்துள்ளார். இந்த படம் சரியாக போகாத நிலையில், வெங்கல் ராவ் தனது சொந்த ஊரான ஆந்திராவிற்கு சென்றுவிட்டார்.

vengal rao vadivelu

இதையடுத்து, வெங்கல் ராவின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. அதில், எனக்கு கை, கால் விழுந்து போச்சு, நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல, பணம் இல்லை. மருந்து வாங்க கூட பணம் இல்லை. சினிமா நடிகர் சங்கங்கள் எனக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியானதை அடுத்து, வெங்கல் ராவ்க்கு பலர் உதவி செய்து வருகின்றனர். நடிகர் வடிவேலு வெங்கல் ராவுக்கு ரூ1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாகவும்,போனில் நலம் விசாரித்துள்ளார்.

கூலி வேலை செய்தேன்: இந்நிலையில், வெங்கல் ராவ் அளித்துள்ள பேட்டியில், நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் இந்த ஊரில் தான். சின்ன வயதிலேயே அப்பா இறந்துவிட்டதால், குடும்ப கஷ்டத்திற்காக நான், என் அக்கா அனைவரும் கூலி வேலை செய்தோம். அதில் கிடைக்கும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் வைத்து குடும்பத்தை நடத்தினோம். அப்போது தான் எனக்கு சினிமானில் பைட் பண்ண வேண்டும் என்ற ஆசை வந்தது. இதையடுத்து, நான் மெட்ராசுக்கு வந்து தமிழ் தெரியாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

ரூ 250 சம்பளம்: சங்கத்திற்கு போய் நான் நல்ல பைட் பண்ணுவேன் சார், எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்றேன். அதன் பின், ஒரு சில படத்தில் பைட்டராக நடித்தேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, பெங்காலி, இங்கிலீஷ், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் ஃபைட் பண்ணி இருக்கேன். எனக்கு அப்பெல்லாம் சம்பளம், 250 ரூபாய் தான். கொஞ்சநாள் கழித்து என் முட்டி தேஞ்சு போச்சு, அதனால என்னால சண்டை போட முடியாமல் போனது. அதன்பிறகு தான், காமெடியனாக நடிக்க முடிவு செய்தேன். அதன் பிறகு தான், வடிவேல் அண்ணா கிட்ட போயிட்டு நான் ஃபைட் பண்ணல, காமெடிக்கு வரேன் நான் சொன்னேன். அதற்கு அவர் சரி வா என்றார். அதுக்கப்புறம் தான் நான் காமெடிக்கு வந்தேன்.

vengal rao vadivelu

என் உயிர் இருக்கும் வரை: எனக்கு 25 வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. 30 வயசுல தான் சினிமாவுக்கு வந்தேன். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் சின்ன வயசுலேயே ஒரு நோயால் இறந்து விட்டார். மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து கல்யாணம் செய்துவைத்தேன். மகளை கல்யாணம் செய்த இடத்தில் கூட பொண்ணு நல்லா இல்ல, மாப்பிள்ளை குடும்பம் ரொம்ப மோசமான குடும்பம். இங்கே வந்துவிட்டாள் அப்பா, அம்மா பெயர் கெட்டுவிடும் என்று, அங்கேயே கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். என் மகளுக்கு மாப்பிள்ளை ஒரு வேளை சாப்பாடுக்கூட போடுவது இல்லை. ஒரு கை, கால் வராத இந்த நேரத்திலும், என் மகளுக்கு நான் தான் சாப்பாட்டுக்கு பணம் அனுப்புகிறேன். என் உயிர் இருக்குற வரைக்கும் என் மகளுக்கு பணம் அனுப்புவேன் என்று நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் கண்ணீர் மல்க பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X