காசு கேட்டாலே தப்பா பேசுறாங்க.. காமெடி நடிகை மதுமிதாவுக்கு வாய்ப்பு குறைந்தது எப்படி?.. ஓபன் பேட்டி!

சென்னை: சினிமாவில் நடிக்க பேசும் சம்பளத்தை கேட்டாலே இந்த பொண்ணு ஓவரா பேசுது என்றும் அதிகமாக காசு கேட்குது என சினிமாவில் பரப்பி விட்டு பட வாய்ப்புகளை இழக்க வைத்து விடுவதாக நடிகை மதுமிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்கு முன்பும் அதில், பங்கேற்ற பிறகும் அதை பார்ப்பதையே தான் தவிர்த்து விட்டதாகவும் கூறியுள்ளார். கமல்ஹாசன் சாரை ஒரு நடிகராக ரொம்பவே பிடிக்கும் என்று சொல்லி விட்டு பிக் பாஸ் பற்றி பேசுவதை தவிர்த்து விட்டார்.

madhumitha interview

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த 'போட்' படத்தில் கடைசியாக நடித்த மதுமிதா சினிமாவில் தனக்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஏகப்பட்ட விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார்.

நடிகைகளுக்கு சிக்கல்: சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு பல கோடி சம்பளம் வழங்கப்பட்டு வரும் நிலையில், முன்னணி ஹீரோயின்களுக்கு சில கோடிகள் தான் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. அதிலும், புதுமுக நடிகை என்றால் பட வாய்ப்பே பெரிய விஷயம் என சம்பளத்தையே கொடுக்காமல் ஏமாற்றி விடுவார்களாம். காமெடி நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கவே படாதபாடு பட்டு வருவதாக நடிகை மதுமிதா தனது பேட்டியில் கூறியுள்ளார்.

சம்பளம் கேட்டா கெட்டவளா?: ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதற்கு முக்கியமான விஷயமே அந்த படத்தில் நடித்தால் சம்பளம் கிடைக்கும் என்பதற்காகத்தான். ஆனால், சம்பளத்தை கொடுக்கவே மாட்டாங்க. நாமும் பல வழிகளில் முட்டி மோதி பார்த்து கேட்டாலும் கொடுக்க மாட்டாங்க, அப்போ கொஞ்சம் கோபப்பட்டு சம்பளத்தை எப்பத்தான் கொடுப்ப என கேட்டு விட்டால் போதும், இவ ரொம்ப கோபக்காரி இவளை படத்தில் ஒப்பந்தம் செய்யாதீங்க என மற்ற தயாரிப்பாளர்களுக்கு சொல்லிடுவாங்க, அந்த பிரச்சனை தான் இங்கே நடந்துக் கொண்டிருப்பதாக மதுமிதா கூறியுள்ளார்.

போட் படத்தில் நடித்த அனுபவம்: உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ஜாங்கிரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான மதுமிதா புலி படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவான போட் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் தனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் ரொம்பவே மெனக்கெட்டு நடித்தேன் என்றும் சிம்புதேவன் தனக்கு ரொம்பவே பிடித்த இயக்குநர் என்றும் மதுமிதா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X