twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்க மொழியில காமெடி பண்ணுங்க.. அதுதான் ஜெயிக்கும்.. காமிக்ஸ்தான் தமிழ் டீமின் கலகலப்பான பேட்டி!

    |

    சென்னை: அமேசான் பிரைமில் இன்று வெளியாகவுள்ள காமிஸ்தான் தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் அசத்தலான நடுவர்கள் நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பிரேத்யக பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

    Recommended Video

    COMEDY பண்ண CLASS எடுக்குறோம் | COMICSTAAN TEAM CHAT | FILMIBEAT TAMIL

    தனுஷின் யாரடி நீ மோகினி, பொய் சொல்லப் போறோம் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்திக் குமார், பிரவின் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

    Comicstaan tamil team funny interview!

    செப்டம்பர் 11ம் தேதியான இன்று தமிழில் முதல் முறையாக ஒரு ஸ்டாண்ட் காமெடி ஷோ தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் மொத்தம் 6 ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் போட்டியிடுகின்றனர். மிஸ். ஜானகியாக கலக்கிய அபிஷேக் குமாரும் ஒரு போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பேட்டியில் பேசிய நடிகர் கார்த்திக் குமார், இந்தி பிரச்சனை தான் என வைரலாகி வரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆரம்பத்திலேயே செமையா ஒரு கவுன்ட்டர் கொடுத்து பேட்டியை கலகலப்பாக்கினார். அதன் பின்னர் பேசிய அவர், ஸ்டாண்ட் அப் காமெடியன்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறோம் என்பதை பற்றி விவரமாக விளக்கினார்.

    'அது அடிப்படை உரிமை.. யாரும் கட்டாயப்படுத்த முடியாது..' ரத்த பரிசோதனைக்கு சஞ்சனா கல்ராணி மறுப்பு!'அது அடிப்படை உரிமை.. யாரும் கட்டாயப்படுத்த முடியாது..' ரத்த பரிசோதனைக்கு சஞ்சனா கல்ராணி மறுப்பு!

    உங்களுக்கு எந்த மொழி எளிதாக வருகிறதோ, எந்த மொழியில் உங்களால் சிந்திக்க முடிகிறதோ, அந்த மொழியில் காமெடி பண்ணுங்க ஜெயிக்கலாம் என்கிற டிப்ஸையும் கொடுத்துள்ளார்.

    ஃபுல் ஃபன்னாக இருக்கும் இந்த பேட்டி வீடியோவை மிஸ் பண்ணாம பாருங்க, அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் காமிக்ஸ்தான் நிகழ்ச்சியையும் மிஸ் பண்ணிடாதீங்க!

    English summary
    Amazon Prime exclusive Comedy show Comicstaan Tamil started from today. Actor Karthick Kumar, Praveen Kumar, Put chutney Rajamohan will do the judge role in the comedy show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X