சும்மா தெறிக்க விடுறாங்களே.. காமிக்ஸ்தான் வின்னர் அபிஷேக் மற்றும் ரன்னர் ஷியாமாவின் கலகல பேட்டி!

சென்னை: அமேசான் பிரைமில் காமிக்ஸ்தான் நிகழ்ச்சி பார்த்து விட்டீர்களா? இல்லையென்றால், உடனடியாக பார்த்து விடுங்கள்.

Recommended Video

அந்த 10 லட்சத்த என்ன பண்ணேன் தெரியுமா ? | CLOSE CALL WITH ABHISHEK & SYAMA |FILMIBEAT TAMIL

இந்த லாக்டவுனில் ஒடிடியில் வெளியான ஒரே நல்ல விஷயம் அது தான் என்றே சொல்லலாம்.

ஏகப்பட்ட மொக்கைப் படங்களை வெளியிட்டு வந்த அமேசான் பிரைமில் 6 போட்டியாளர்கள், 3 நடுவர்கள் என காமெடியில் ஒவ்வொரு எபிசோடும் களை கட்டியது.

அது போன வருஷம்

அது போன வருஷம்

இதில், செம காமெடி என்னவென்றால், இந்த காமிக்ஸ்தான் நிகழ்ச்சி நடந்து முடிந்தது கடந்த ஆண்டாம். அந்த விஷயத்தையும் வின்னர் அபிஷேக் போகிற போக்கில் போட்டுடைத்து விட்டார். இப்போ தான் சமீபத்தில் நல்ல நேரம் எல்லாம் பார்த்து எடிட்டிங் எல்லாம் முடித்து அமேசானில் வெளியிட்டனர்.

6 போட்டியாளர்கள் 3 நடுவர்கள்

6 போட்டியாளர்கள் 3 நடுவர்கள்

ஷியாமாவின் ஸ்டாண்ட் அப் காமெடியும், அபிஷேக்கின் ரன்னிங் காமெடியும் ரசிகர்களை 8 எபிசோடுகளையும் கலகலப்பாக கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும். நடுவர்களாக பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பிரவீன், கார்த்திக் குமார் மற்றும் புட் சட்னி ராஜமோகன் இப்போ தமிழ் வணக்கம் என மாறி விட்டார். மேலும், ஸ்டாண்ட் அப் காமெடியன் மெர்வின் மற்றும் வித்யுலேகா ராமன் தொகுப்பாளர்களாக இருந்து நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ணியிருந்தார்கள்.

10 லட்சத்தை என்னப்பா பண்ண

10 லட்சத்தை என்னப்பா பண்ண

10 லட்சம் பணத்தை என்னப்பா பண்ண? என்ற கேள்விக்கு? சமத்து பிள்ளையாக இன்ஜினியரிங் படிக்க வச்ச அம்மா அப்பாவுக்கு கொடுத்துட்டேன் என அபிஷேக் சொல்வதாகட்டும், சினிமா அழைப்புகள் குறித்து வெளிப்படையாக பேசுவதாகட்டும், பேட்டியையே காமிக்ஸ்தான் போல கலகலப்பாக்கி விட்டார் அபிஷேக்.

காமெடி பண்ண கத்துக்கிட்டேன்

காமெடி பண்ண கத்துக்கிட்டேன்

இந்த பக்கம் ஷியாமாவும் தன் பங்கு ஏகப்பட்ட சிக்ஸர்களை சைலன்ட்டாக பறக்க விட்டு வந்தார். தனக்கு பிடித்த காமெடியன்கள் என கவுண்டமணி மற்றும் கிரேஸி மோகனை குறிப்பிட்டு இருந்தார். காமிக்ஸ்தான் நிகழ்ச்சி வொர்க்கவுட் ஆகாத ஜோக்குகளையும் எப்படி வொர்க்கவுட் செய்வது என்பதை கற்றுக் கொடுத்தது என இருவரும் கூறி உள்ளனர்.

சின்ன கப் ரகசியம்

சின்ன கப் ரகசியம்

கடைசி வரைக்கு வின்னருக்கு ஏன் பா அவ்ளோ சின்ன சைஸ் கப் கொடுத்தாங்கன்னு யாருமே சொல்லல.. ஆக்சுவலா அவங்களுக்கே சொல்லவில்லை என்பது தான் உண்மை என சத்தியம் செய்யாத குறையாக அபிஷேக் பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க! காமிக்ஸ்தானை எப்போ வேண்டுமானாலும் அமேசான் பிரைமில் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X