சர்ச்சை சர்ச்சை சர்ச்சையோ சர்ச்சை: ப்ரியா பிரகாஷ் வாரியர் என்ன சொல்கிறார்?
Recommended Video

ஹைதராபாத்: தன் படங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது குறித்து ப்ரியா பிராகஷ் வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரு அடார் லவ் படம் மூலம் நடிகையான ப்ரியா பிரகாஷ் வாரியர் கண்ணடித்து ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். ஒரு அடார் லவ் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத் சென்ற ப்ரியா தெலுங்கு ஃபிலிமிபீட்டிற்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது அவர் கூறியதாவது,

பிரபலம்
நான் கண்ணடித்த காட்சி இந்த அளவுக்க ஹிட்டாகும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. லவ்வர்ஸ் டே(ஒரு அடார் லவ் தெலுங்கில் லவ்வர்ஸ் டே என்ற பெயரில் வெளியாகிறது.) படம் பள்ளியில் நடக்கும் காதல் கதை. பள்ளிக்காலத்து காதல் பற்றியது. இந்த படத்தில் அனைவருமே புதுமுகங்கள். புதுமுகங்கள் நடித்த படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது இதுவே முதல் முறை.

பிரச்சனை
பிரபலமானதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. நான் கண்ணடித்த வீடியோ பிரபலமானதை பார்த்து என் குடும்பத்தார், நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எங்கள் படம் நான்கு மொழிகளில் ரிலீஸாகப் போவது புதுமுகங்களான எங்களுக்கு பெரிய விஷயம்.

ஸ்ரீதேவி பங்களா
என் முதல் பட சர்ச்சைகள் தேவையில்லாதவை. அது குறித்த வழக்குகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால் அது என்னை பாதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது நிம்மதி. ஸ்ரீதேவி பங்களா பற்றி நிறைய சர்ச்சைகள், வக்கீல் நோட்டீஸ் வந்தது என்று நிறைய கேள்விப்படுகிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் நான் அப்படி எதையும் கேள்விப்படவில்லை.

பட வாய்ப்புகள்
லவ்வர்ஸ் டே படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். அந்த பட ரிலீஸுக்கு பிறகு நான் பல படங்களில் பிசியாகிவிடுவேன் என்று நினைக்கிறேன். நான் கண்ணடித்த வீடியோ பிரபலமான பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஒரு அடார் லவ் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் எதையும் ஏற்கவில்லை என்றார் ப்ரியா.


Click it and Unblock the Notifications











