750 ரூபாய் சட்டை போடுற அளவுக்கு வளர்ந்து இருக்கேன்.. குக் வித் கோமாளி பிரபலம் கேபிஒய் பாலா பேட்டி!

சென்னை: கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி என கலக்கிக் கொண்டிருக்கும் கேபிஒய் பாலாவின் சிறப்பு பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மீடியாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என போராடி வருகிறார் பாலா.

பஞ்ச் பாலா என்பதை விட தன்னை வெட்டுக்கிளி பாலா என்று அழைத்தால் தான் ரொம்ப பிடிக்கும் என கலகலப்பாக இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

குக் வித் கோமாளி பாலா

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது அதிரடி பஞ்ச் வசனங்களால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரொம்பவே எளிமையாகவும், தன்னடக்கத்தோடும் கொஞ்சம் கலாய் கலந்து பாலா கொடுத்துள்ள பேட்டி வெளியாகி இருக்கிறது.

750 ரூபாய்க்கு சட்டை

750 ரூபாய்க்கு சட்டை

கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்துக்கு பிறகு இப்போ கேபிஒய் பாலாவின் வளர்ச்சி எப்படி இருக்கு? என்கிற கேள்விக்கு சாதாரணமாக சிரித்துக் கொண்டே, முன்பெல்லாம் 450 ரூபாய்க்கு சட்டை வாங்கிப் போடுவேன், இப்போ 750 ரூபாய்க்கு சட்டை போடும் அளவுக்கு உயர்ந்துள்ளேன் என தனது ஸ்டைலில் கெளன்ட்டர் கொடுத்துள்ளார்.

மஜாவா இருக்கு

மஜாவா இருக்கு

இது போன்ற ஓட்டல்களில் எல்லாம் வந்து சாப்பிட முடியுமா? என நினைத்த தான் இப்போ இங்கே வந்து சாப்பிடுவதும், ரசிகர்கள் செல்ஃபி மற்றும் ஆட்டோகிராஃப்களை எடுத்துக் கொள்வதையும் பார்க்கவே ரொம்பவே மஜாவா இருக்கு என வெள்ளந்தியாக பாலா பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சினிமா வாய்ப்புகள்

சினிமா வாய்ப்புகள்

குக் வித் கோமாளி பிரபலங்களான அஸ்வின், ஷிவாங்கி, புகழ் என பலருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில், கேபிஒய் பாலாவுக்கு அப்படி ஏதும் வாய்ப்புகள் குவிகிறதா? என்கிற கேள்விக்கு இப்போதைக்கு ஏதும் இல்லை என ரொம்பவே ஃபீல் பண்ணி பேசும் பேட்டியை மிஸ் பண்ணாமல் பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X