Coolie: 74 வயசுல.. 45 நாள் நைட் ஷூட்.. ரஜினி சார் எல்லாம் சான்ஸே இல்லை.. ‘கூலி’ லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
சென்னை: நீயா நானா கோபிநாத் தனது யூடியூப் சேனலில் லோகேஷ் கனகராஜை எக்ஸ்க்ளூசிவாக பேட்டியளித்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. அடுத்த மாதம் ஆகஸ்ட் 14ம் தேதி அரங்கங்களை அதிர விட காத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டாரின் கூலி படம் வெளியாகிறது. லியோ படத்துக்குப் பிறகு இண்டஸ்ட்ரி ஹிட் இயக்குநராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஓவர்சீஸ்களில் எல்லாம் இப்போதே டிக்கெட் புக்கிங்கை தொடங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். சுமார் 100 நாடுகளில் 12000க்கும் அதிகமான திரைகளில் கூலி படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் மற்றும் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ் தமிழ்நாட்டிலும் கூலி படத்தின் ப்ரோமோஷனை ஆரம்பித்து விட்டார். 45 நாட்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த வயதிலும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதே தனக்கும் தனது டீமுக்கும் பிரம்மிப்பாக இருந்தது என்றார்.
45 நாட்கள் நைட் ஷூட்: 74 வயதில் நானெல்லாம் எழுந்து நடப்பேனா என்றே தெரியாது. ஆனால், சிங்கம் மாதிரி ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நள்ளிரவு 2 மணி வரைக்கும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து மிரட்டியிருக்கிறார். 45 நாட்கள் அவரை வைத்து நைட் ஷூட் எடுத்து முடித்திருக்கிறேன். அவர் மட்டுமில்லை, நாகார்ஜுனா சார், உபேந்திரா சார், ஸ்ருதிஹாசன் என பலரும் நைட் ஷூட்டிங்கில் எந்தவொரு தயக்கமும் காட்டாமல் நடித்துக் கொடுத்தனர்.
நானெல்லாம் ஒண்ணுமே இல்லை: இந்த வயதில் நள்ளிரவு நேரத்தில் ஷூட்டிங்கில் ரஜினி சார் நடிப்பதை பார்த்தால், நானெல்லாம் ஒண்ணுமே இல்லை என்று தோன்றும், இன்னமும் அதிகம் வேலை பார்க்க வேண்டும் என்கிற உத்வேகம் அவரை பார்த்தாலே ஆட்டோமேட்டிக்காக வந்துவிடும் என லோகேஷ் கனகராஜ் சொல்ல சொல்ல ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் ஆவது நிச்சயம்.
சிஜியே இல்லை: 1 சதவீதம் தான் அதிகபட்சம் இந்த படத்தில் க்ரீன்மேட் பயன்படுத்தியிருப்பேன். முழுக்க முழுக்க சிஜியே இல்லாமல் ரியல் ஸ்டன்ட் மற்றும் லொகேஷன்களில் படமாக்கப்பட்ட படமாக கூலி வெளியாக காத்திருக்கிறது. அதற்காகவே விசாகப்பட்டினம், வெளிநாடுகள் என எங்கெல்லாம் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் படம் பண்ண முடியுமோ படம் பண்ணினோம் என லோகேஷ் கனகராஜ் கூலி பட ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை வாரி இரைத்துள்ளார்.
டிரைவர் மகன் இயக்க முன்னாள் கண்டக்டர் நடிக்க: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். லோகேஷ் கனகராஜின் அப்பா டிரைவர் என்பது குறித்த தகவலையும் கோபிநாத்துக்கு அளித்த பேட்டியில் ரிவீல் செய்துள்ளார். இதெல்லாம் ஆடியோ லாஞ்சில் பேச வைத்திருந்தேன் என்பதையும் செம க்யூட்டாக லோகேஷ் கூறியுள்ளார்.
எல்சியூ கிடையாது: கூலி திரைப்படம் கண்டிப்பாக எல்சியூ கிடையாது என்றும் இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கவில்லை, குரல் கொடுக்கவில்லை என தெளிவுப்படுத்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கண்டிப்பாக இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கான மெகா ட்ரீட்டாக அமையும் என்றும் லியோ படத்தில் தனக்கு எதிராக கிளம்பிய ட்ரோல்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பதில் சொல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











