Coolie First Review: கூலி படத்தின் முதல் விமர்சனம்.. ரஜினிகாந்த் சொன்ன அந்த வார்த்தை.. லோகேஷ் ஓபன்!
சென்னை: கூலி படத்தின் முதல் விமர்சனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்தே வந்தது தான் தன்னை ரொம்பவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக லோகேஷ் கனகராஜ் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பது ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, செளபின் சாஹீர், சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே மற்றும் அமீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள கூலி திரைப்படம் இன்னும் ஒரு மாதத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது.

கூலி படம் 1000 கோடி அடிக்குமா என்கிற கேள்விக்கும், அடுத்தடுத்து தான் என்ன என்ன படங்கள் பண்ணப் போகிறேன் என்பது குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெளிவாக இருப்பதை பார்க்கவே சூப்பராக உள்ளதாக ரசிகர்கள் அவரது பேட்டியை வைரலாக்கி வருகின்றனர்.
கூலி புரமோஷன் ஆரம்பம்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி உள்ள கூலி திரைப்படம் இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்தியில் அதன் புரமோஷனை ஆரம்பித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இன்னும் ஒரு மாதம் கூலி படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் தூக்கத்தை அவர் தியாகம் செய்ய வேண்டிய சூழல் உருவாகும் என தெரிகிறது. ஒட்டுமொத்த படக்குழுவும் கூலி படத்தை உலகளவில் 100 நாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அத்தனை ரசிகர்கள் மத்தியிலும் சேர்க்க வேண்டிய வேலையை அனல் பறக்க ஆரம்பித்துள்ளனர்.
கூலி முதல் விமர்சனம்: கூலி படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தளபதி படத்துக்குப் பிறகு இப்படியொரு எமோஷனல் கனெக்ட் படத்தை பார்த்தேன் சூப்பர் என கட்டித் தழுவி பாராட்டியது தான் எனக்கு ரொம்பவே சந்தோஷத்தைக் கொடுத்தது. அதற்காக 2 ஆண்டுகள் சரியாக தூங்காமல் உழைத்தது எல்லாம் பலன் கொடுத்தது போல இருந்தது. அன்று இரவு தான் நிம்மதியாக உறங்கினேன் என லோகேஷ் கனகராஜ் கூலி படத்துக்கு முதல் ஆளாக ரஜினிகாந்த் அளித்த விமர்சனம் குறித்து பேசியிருக்கிறார்.

50 கோடி சம்பளம்: கூலி படத்துக்கு 50 கோடி சம்பளம் வாங்கியது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ். அதற்கு காரணம் விஜய்யின் லியோ திரைப்படம் தான். அந்த படம் 600 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியது தான். அந்த படத்திற்கு கிடைத்ததை விட 2 மடங்கு அதிக சம்பளம் கூலி படத்துக்கு எனக்கு கிடைத்தது என லோகேஷ் கனகராஜ் ஓபனாக தனது சம்பள விவரங்களையும் ஷேர் செய்து பேசியுள்ளார்.
அமீர்கான் படம் பான் வேர்ல்ட் படம்: அமீர்கானை வைத்து லோகேஷ் கனகராஜ் இரும்புக்கை மாயாவி படத்தை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவருடன் இணைந்து பண்ணப்போகிற படம் வெறும் இந்திப் படமாக இருக்காது. உலகம் முழுவதும் உள்ள சூப்பர் ஹீரோ ரசிகர்களுக்கான படமாக அந்த படம் இருக்கும் என பேசியுள்ளார். மேலும், கைதி 2, விக்ரம் 3 மற்றும் ரோலக்ஸ் உள்ளிட்ட படங்களும் தன்னுடைய லைன் அப்பில் இருப்பதாகவும் மாஸ்டர் 2, லியோ 2 பண்ண ஆசை தான். ஆனால், விஜய் அண்ணா ரொம்ப பிசியாகிட்டாரே என்றார்.


Click it and Unblock the Notifications











