twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எங்கம்மா மறைந்த அதே இடத்தில் ஜனா சாரை அப்படி பார்க்கும் போது முடியவே இல்லை.. மனமுருகிய டி. இமான்!

    |

    சென்னை: இசையமைப்பாளராக அறிமுகமானதும் என் வீட்டிற்கு வந்து என்னை அணுகியவர் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் என லாபம் பிரஸ்மீட்டில் பேச ஆரம்பித்த இசையமைப்பாளர் டி. இமான் ஏகப்பட்ட தகவல்களையும் உருக்கமான விஷயங்களையும் ஷேர் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

    மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனை பற்றியே நேற்று நடந்த லாபம் பிரஸ் மீட்டில் அனைத்து நடிகர்களும் சினிமா கலைஞர்களும் உருக்கமாக பேசினர்.

    இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை மற்றும் லாபம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது அந்த படக்குழுவினரை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    ”நான் பாவியைப் போல உணர்கிறேன்” லாபம் பிரஸ்மீட்டில் கண் கலங்கிய விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ!”நான் பாவியைப் போல உணர்கிறேன்” லாபம் பிரஸ்மீட்டில் கண் கலங்கிய விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ!

    விஜய்சேதுபதி கண்ணீர்

    விஜய்சேதுபதி கண்ணீர்

    பிரஸ் மீட்டில் கண்ணீர் மல்க விஜய்சேதுபதி பேசிய வீடியோ வைரலான நிலையில், இசையமைப்பாளர் டி. இமான் இயக்குநர் ஜனநாதனை பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழன் படம் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமான டி. இமானை முதன் முதலாக வீட்டிற்கு சென்று சந்தித்த இயக்குநர் ஜனநாதன் சார் தானாம்.

    இயற்கை படத்திலேயே

    இயற்கை படத்திலேயே

    இயற்கை படத்திலேயே நாங்கள் இணைந்து பணிபுரிய வேண்டியது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இத்தனை ஆண்டுகள் கழித்து லாபம் படத்தில் தான் இருவரும் இணைந்து பணியாற்றும் சூழல் உருவானது.

    சீன இசைக்கருவி

    சீன இசைக்கருவி

    இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் இசைக் கலைஞராக நடித்துள்ளார். அவர் இடம்பெறும் ஒரு பாடலுக்கு சீனாவில் இருந்து வயலின் போன்ற ஒரு இசைக் கருவியை பயன்படுத்தி உள்ளேன். அந்த இசைக் கருவி மற்றும் அதன் அரசியல் பின்னணி குறித்த வரலாற்றை எனக்கு தெரிந்த அறிவுடன் அவருடன் பகிரும் போது அப்படியே சின்னக் குழந்தை போல கேட்டுக் கொண்டு இருந்தார்.

    நூறு சதவீதம்

    நூறு சதவீதம்

    இத்தனைக்கும் உலக அரசியல் அத்தனையையும் கரைத்துக் கொடுத்த என்சைக்கிளோபீடியா அவர் என புகழாரம் சூட்டினார். சில இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் வழக்கம் போல சாங் பிரிப்பதற்காக என்ன என்ன இசைக் கருவிகளை பயன்படுத்தினீர்கள் என கேட்டு நோட்ஸ் எழுதிக் கொண்டு செல்வார்கள். ஆனால், அதனை அப்படியே காட்சிப்படுத்த மாட்டார்கள். எலக்ட்ரிக்கல் கிட்டார் என எழுதிக் கொடுத்தால் சாதாரண கிட்டாரை வைத்து வாசித்துக் கொண்டிருப்பார்கள் காட்சியில், ஆனால், ஜனா சார் அதே சீன இசைக் கருவியை இந்த படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார். செய்யும் தொழிலுக்கு 100 சதவீதம் உண்மையாக இருந்த மனுஷன் இப்படி நம்மை விட்டு இவ்வளவு சீக்கிரத்தில் பிரிந்து சென்றது மிகப்பெரிய வருத்தம் என்றார்.

    அம்மா மறைந்த அதே இடத்தில்

    அம்மா மறைந்த அதே இடத்தில்

    மேலும், அவர் மறைந்த செய்தி கேட்டதும் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஓடிச் சென்று பார்த்தேன். அதே ஐசியூவில் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பாக என் அம்மாவும் அதே மாதிரியான கோலத்தில் இறந்து கிடந்ததை பார்த்த அதே ஞாபகம் தான் எனக்கு வந்தது. உண்மையாகவே உடைந்து போய்விட்டேன்.

    ஆலயமணி சார்

    ஜனா சாருடன் ஆலயமணி சார் தான் எப்போதும் கூடவே வருவார். லாபம் திரைப்படத்தில் அவரது பங்கும் பெரியது. லிரிக்ஸ் டிஸ்கஸன், மியூசிக் டிஸ்கசன் என அனைத்திலும் அவர் உடனிருந்தார். ஜனா சார் இறந்தது நிச்சயம் அவருக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்றும் இசையமைப்பாளர் டி. இமான் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    English summary
    Laabam music composer D Imman emotional speech about late director SP Jananathan at Laabam press meet function video goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X