உயிருக்கு போராடிய கணவர்.. ஜில்லா விட்டு பாடல் எடுத்த போது கதறி அழுதேன்.. சுஜாதா கண்ணீர்!
சென்னை: சூரியவம்சம் படத்தில் வருவது போல ஒரே பாட்டில் மூலம் முன்னுக்கு வருவதும், ஓவர் பாட்டில் ஒபாமா ஆவது என்று சொல்வார்கள் அப்படி ஒரே ஒரு பாட்டின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடன இயக்குநர் சுஜாதா. ஈசன் படத்தில் வரும் ஜில்லா விட்டு ஜில்லா வந்து என்ற பாடல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த, சுஜாதா தற்போது யூடியூப் சேனலுக்கு பல விஷயத்தை மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில், சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது ஆர்வம் இருந்ததால் நடனம் மாஸ்டராக ஆனேன். 25 வருடத்திற்கு மேலாகவே நான், நடனம் மாஸ்டராக சினிமாவில் இருக்கிறேன். காதல் தேசம் திரைப்படத்தில் வரும் முஸ்தபா... முஸ்தபா என்ற பாடலுக்கு தான் நான் முதன் முதலில் நடனம் மாஸ்டராக பணியாற்றினேன். அதன் பிறகு, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன மாஸ்டராக பணியாற்றி இருக்கிறேன். என்னதான் இருபது வருடத்திற்கு மேலாக சினிமாவில் இருந்தாலும் திரைக்கு பின்னாலே நான் இருந்ததால் டைட்டில் கார்டில் நடனம் சுஜாதா என்று வருமே தவிர, என்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது ஈசன் படத்தில் வரும் ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடல் தான்.

நடிக்க பயந்தேன்: ஆனால், ஈசன் படத்திற்கு முன்பாகவே விஜய்யின் கில்லி திரைப்படத்தில் த்ரிஷாவின் அம்மாவாக நான் நடித்திருந்தேன். அந்த வாய்ப்பை எனக்கு தரணி அவர்கள் கொடுத்தார். கட்டாயம் நீங்கள் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னதால் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதேபோல, நான் அவன் இல்லை 2 படத்தில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு தான் ஈசன் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு எனக்கு நேரடியாக என்னை தேடி வரவில்லை அந்த பாடலுக்காக பல பெண் நடன இயக்குநர்களை அணுகி அவர்கள் நடிக்க மறுத்துவிட்டதால், எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. பாடல் வெளியாகி பாட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பிறகு, பலரும் என்னிடம் முதலில் இந்த வாய்ப்பு எனக்குத்தான் வந்தது என்று சொன்னார்கள்.

ஐசியூவில் கணவர்: தினேஷ் கேட்டுக்கொண்டதால், சரி நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆனால், படப்பிடிப்பு வந்து பாடலை கேட்டதும், இந்த பாடலுக்கு எப்படி நடனம் ஆட போகிறோம் என்கிற பயம் எனக்கு வந்துவிட்டது. ஆனால், வேறு வழியே இல்லை ஆடித்தான் ஆகவேண்டும் என, அரை மனதோடு தான் அந்த பாடலுக்கு நான் நடனம் ஆடினேன். அதே நேரம், படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போது, என் கணவருக்கு இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் ஐசியூவில் இருந்தார். அப்போது தினேஷ் போன் செய்து, அக்கா இன்னைக்கு வரமுடியுமா என்று கேட்டார். அப்போது என் கணவர் நீ போகவில்லை என்றால், தயாரிப்பாளருக்குத்தான் லாஸ் ஆகும். நீ போக என்று சொன்னார்.

படப்பிடிப்பில் அந்த பாடல் வரியை கேட்டு எனக்கு அழுகைத்தான் வந்தது. இந்த பாடல் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல். ஆனால் ஒரே நாளில் இந்த பாடல் அநியாயத்திற்கு இவ்வளவு பெரிய வெற்றி பாடலாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. படம் வெளியாகி பாடலைப்பார்த்த பலரும் என்னை பாராட்டிய போதுதான் மனதிற்கு நிம்மதியாகவே இருந்தது என்று நடன மாஸ்டர் சுஜாதா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











