கேமரா மேனால் குழந்தையோடு தெருவில் நின்றேன்.. வாழ்க்கையே போச்சு..டான்சர் விஜயலட்சுமி கண்ணீர் பேட்டி!
சென்னை: உருகி உருகி காதலித்தேன், ஆனால் திருமணமான சில மாதத்திலேயே குழந்தையோடு நடுத்தெருவில் தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என்று டான்சர் விஜயலட்சுமி, தனது வாழ்க்கையில் கடந்து வந்த மோசமான சம்பவத்தை யூடியூப் சேனல் ஒன்றில் கண்ணீருடன் பேசி உள்ளார்.
அந்த பேட்டியில் நான் சரத்குமார் நடித்த சூரியன் படத்தில் வரும் பதினெட்டு வயது இளம் மொட்டு மனது, மௌனராகம் படத்தில் வரும் ஓ ஹோ மேகம் வந்ததோ, இன்னிசை பாடி வரும் இந்த பாட்டுக்கு உருவம் இல்லை என பாடல்களில் க்ரூப் டான்சராக இருந்தேன். என் அம்மா அப்பாவிற்கு காதல் திருமணம் மூன்று குழந்தைகள் இருந்த போது என் அப்பா அம்மாவை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

டான்ஸர் விஜயலட்சுமி: என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்கள். ஒரு வேளை சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டேன். சாப்பிடாமல் இருந்து இருந்து என் உடல்நிலை மோசமாகிவிட்டதால், அரசு மருத்துவமனையில் சேர்த்து என்னை காப்பாற்றினார்கள். அந்த மருத்துவமனையில் தினமும் பிரெட் பால் தருவார்கள் அதை சாப்பிடுவதற்காகவே மருத்துவமனையிலேயே இருந்து விடலாமா என்று கூட யோசித்து இருக்கேன்.
அப்போது தான் சினிமாவில் க்ரூப்பாக நிற்பதற்கு ஆட்கள் தேவை என்று வந்தது. எம்ஜிஆர் நடித்த படத்தில் நானும் என் அம்மாவும் க்ரூப்ல நின்றோம். அதற்காக எங்களுக்கு 12 ரூபாய் தத்தார்கள். அந்த பணத்தை கையில் வாங்கும் போது சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அது மட்டுமில்லாமல், ஷூட்டிங்கில் நல்ல சாப்பாடும் கிடைத்ததால், வயிறு நிறைவாக இருந்தது. நைட் ஷூட்டிங் இருந்தால் பன்பட்டர் ஜாம் தருவாங்க அதற்காக பல நாட்கள் விழித்து இருக்கிறேன்.
அவர் மீது காதல்: அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமா டான்ஸ் கத்துக்கிட்டு டான்ஸர் ஆனேன். அதன் பிறகு தாரா மாஸ்டரிடம் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்தேன் அப்போது தான் உதவி கேமராமேனாக இருந்த சோட்டா மீது எனக்கு காதல் வந்தது. இப்போது அவர் தெலுங்கு சினிமாவில் பிரபலமான கேமரா மேனாக இருக்கிறார். அவர் மீது காதல் இருந்தது, இருந்தாலும் அம்மாவின் நிலைமை வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தேன். இதையடுத்து அவருக்கும் எனக்கும் கோவிலில் திருமணம் நடந்தது.
சந்தோஷம் நிலைக்கவில்லை: திருமணமான ஒரு மாதம் என் வாழ்க்கை மிகவும் சந்தோஷகமாக இருந்தது. ஆனால், அந்த சந்தோஷம் என் வாழ்க்கையில் நீடிக்கவில்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணு தொடர்பு இருந்தது. இந்த செய்தி பேப்பரில் எல்லாம் வந்துவிட்டது. அது பற்றி நான் கேட்டான், முதலில் இல்லை என்று மறுத்தவர் பின், ஆமாம், நான் சினிமாவில் முன்னேற வேண்டும் அதற்காகத்தான் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன் என்று என்னை சமாதானப்படுத்தினார். அவர் மீது இருந்த நம்பிக்கை மற்றும் காதலால் அப்போது அதை என் மனசு ஏற்றுக்கொண்டது.
என்னை மறந்துவிட்டார்: சிறுவயதில் இருந்தே கஷ்டப்பட்டு,கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்த என் வாழ்க்கையில் மீண்டும் புயல் அடிக்க ஆரம்பித்து விட்டது. அதன் பிறகு வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியாமல் உடைந்துவிட்டேன். எப்போது நான் பேசினாலும் கவலைப்படாதே நான் வருவேன் என்று தான் பேசுவார், இதனால் அவர் மீது எனக்கு நம்பிக்கை குறையல, ஆனால், என் குழந்தைக்கு நான்கு வயது இருக்கும் போது, இந்த பெண் எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து என்னையும் சோட்டாவையும் பிரிந்து விட்டார். அவர் என்னை கல்யாணம் பண்ணது, என்னை காதலித்து ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்துவிட்டோம் என்ற எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் அவருக்கு இல்லை. இதுக்கு மேல் சரிப்பட்டு வராது என்று மீண்டும் சினிமாவில் என் பயணத்தை தொடங்கினேன் என்று டான்சர் விஜயலட்சுமி அந்த பேட்டியில் கண்ணீருடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











