சந்தோஷ ஆசின்!
| Click here for more images |
தசாவதாரம் எனது திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய மைல் கல்லாக அமையப் போகிறது. கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததை பெருமையாகக் கருதுகிறேன் என ஆசின் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிய ஆசின் இந்தியிலும் புகுந்து விளையாட புறப்பட்டுள்ளார். கமல்ஹாசனுடன் நடித்து வந்த தசாவதாரம் படத்தில் ஆசின் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன.
கலைஞானியுடன் நடித்து ஓய்ந்திருந்த ஆசின், தசாவதாரம் குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார். ஆசின் கூறுகையில், கமல் சாருடன் நடிப்பது என்னைப் போன்ற நடிகைகளுக்கு நல்ல அனுபவமாகவும், பாடமாகவும் இருக்கும்.
தசாவதாரம் ஷூட்டிங்கில் கலந்து ெகாண்ட நாட்களை அனுபவித்து மகிழ்ந்தேன். கமல் சார் தவிர இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ரேகா, ஜெயப்ரதா ஆகிேயாரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் எனது திரையுலக வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாக அமையும்.
விரைவில் தசாவதாரம் படத்திற்காக டப்பிங் பேசவுள்ளேன். ஆனால் படப்பிடிப்பின்போதே பெரும்பாலான வசனங்களை பேசி விட்டேன். எனவே டப்பிங் பகுதி குறைச்சலாகத்தான் உள்ளது.
படத்தின் ஒவ்ெவாரு காட்சியும் மிகுந்த அக்கறையுடன் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பெரும் வரலாறு படைக்கும், சாதனை படைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் உள்ளேன்.
இப்படத்துக்காகத்தான் நான் நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தேன். கிட்டத்தட்ட 5 மாத கால்ஷீட் கொடுத்துள்ளேன். இப்படத்துக்காக கிட்டத்தட்ட 6 மாதங்கள் பணியாற்றியுள்ளேன். தேவைப்பட்டால் மேலும் கால்ஷீட் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார் ஆசின்.
வருகிற தீபாவளிக்கு ஆசினுடைய இரு படங்கள் திரைக்கு வருகின்றன. ஒன்று சூர்யாவுடன் நடித்துள்ள வேல், இன்னொன்று ஆமிர்கானுடன் நடித்துள்ள இந்தி கஜினி. இதனாலும் ஆசின் படு சந்தோஷமாக உள்ளார்.
இந்த தீபாவளி எனக்கு சிறப்பான தீபாவளி. இந்த தீபாவளிக்கு நான் நடித்த இரு படங்கள், அதுவும் இரு மொழியில் திரைக்கு வருவது சந்தோஷமாக உள்ளது. நிச்சயம் ரசிகர்களுக்கு இரு படங்களும் விருந்து படைக்கும் என்றார் அழகான சிரிப்பை சிந்தியபடி.


Click it and Unblock the Notifications











